24 special

ஒரு பெரிய ஆதாரம் சிக்கப்போகிறது ...! ஆளும் கட்சிக்கு பெரும் ஆப்பு...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

நேற்று பாஜக தொடங்கிய என் மண் என் மக்கள் பாதயாத்திரை தென் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, உள்துறை அமைச்சர் அமிட்ஷா நேரடியாக வந்து அண்ணாமலை கையை உயர்த்தி பிடித்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.


தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக இராமேஸ்வரத்தில் குவிந்து இருந்தனர், இவை அனைத்தும் வெளிவந்த செய்தி இவை அனைத்தையும் தாண்டி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமிட்ஷா பாதயாத்திரை நிகழ்ச்சியை இராமேஸ்வரம் கோவில் முன்பு தொடங்கி வைக்க என் மண் என் மக்கள் யாத்திரை அதிகார பூர்வமாக தொடங்கியது.

இவை அனைத்திலும் வெளிவந்த செய்தி இவை அனைத்தையும் தாண்டி பாஜக நேற்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு இணையாக கூட்டத்தை குவித்து இருந்தது பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அண்ணாமலை நடை பயணம் பற்றிய பேச்சுதான் அதிகமாக காண படுகிறது. ஒரு நாள் கூத்தாக நடை பயணம் இருக்கும் அதன் பிறகு மக்கள் கவனத்தை பெறாது என பலர் நினைத்து இருக்க கிராமங்களிலும் நடை பயண விஷயம் குறித்து பேசு பொருள் அதிகமாக இருக்கிறது.

இவை அனைத்தையும் தாண்டி யாத்திரை போகும் திசை என்ன? அதில் உண்டாகும் மாற்றம் என்ன என்பது குறித்து அமித்ஷாவிடம் அண்ணாமலை முழுமையாக விளக்கி இருக்கிறாராம் யாத்திரையின் முதல் வார இறுதியில் முக்கிய திருப்பம் ஒன்று உண்டாகும் எனவும், பிரபலங்கள் பாஜகவில் இணையும் விழாவும் இருக்கிறதாம் இந்த முறை யாரும் எதிர் பாரத புதிய யுத்தி ஒன்றை பாஜக வைத்து இருப்பது குறித்த தகவல் சூசகமாக ஆளும் கட்சியான திமுகவிற்கு தெரியவந்து இருக்கிறதாம்.

ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கும் நிலையில் இந்த முறை அண்ணாமலை நடை பயணத்தில் பெரிய தலைகள் குறித்து மிக பெரிய ஆதாரம் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிய ஆளும் கட்சியான திமுக ஒருபுறமும், ஆட்சியில் அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.