24 special

ஏண்டா கை வைத்தோம் தினம் தினம் புலம்பும் கரூர் கும்பல்...!

Senthil balaji
Senthil balaji

கடந்த மே மாதம் 25ஆம் தேதி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இன்னும் சில செந்தில் பாலாஜி தொடர்பில் இருந்தவர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்படி சோதனை நடத்தப்படுவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் அதிகாரிகள் சோதனை இடுவதற்காக சென்ற பொழுது அங்கு ஏற்கனவே கூடி இருந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை காரில் இருந்து வெளியேற விடாமல் தடுத்ததோடு காரின் மீது கல்வீசி சேதம்படுத்தி உள்ளனர். 


இதற்குப் பிறகு தங்களது பணிகளை ஆற்ற வந்த அதிகாரிகளை தாக்கியதோடு அங்கிருந்த பெண் அதிகாரியான முன்னாள் தடகள வீரர் காயத்ரியையும் தாக்கி அவரது கையில் இருந்த கைப்பையையும் பிடுங்கி இழுத்து அதிலிருந்து சில தரவுகளையும் அவர்கள் அழிக்க முற்பட்டடுள்ளார். இதுமட்டுமில்லாமல் அவரிடம் தவறாக நடக்க முற்பட்டதாகவும் செய்திகள் வந்தது. வருமானவரித்துறை அதிகாரிகளின் தரப்பில் லேப்டாப்,  ஐந்து பெண் டிரைவ்கள் ஆகியவற்றை அவர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. 

அதிகாரிகள் தாக்கப்பட்டதால் சோதனை செய்ய முடியாமல் அன்று அங்கிருந்து கிளம்பி காவல் நிலையத்திடம் தஞ்சம் புகுந்ததோடு மறுநாள் சி ஆர் பி எப் வீரர்களின் பாதுகாப்பிலே அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தும், கரூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. அதனை எதிர்த்து அதிகாரிகளின் பணிகளை செய்ய விடாமல் அவர்களை தடுத்ததோடு மோசமான வார்த்தைகளால் திட்டி, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தரவுகளை அழித்த குற்றங்களை செய்த அந்த 19 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். 

அதிகாரிகளின் மனுவை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது பிறகு நேற்றைய தினம் வழக்கு மீதான விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பையும் அளித்துள்ளது,  அந்த தீர்ப்பு தற்போது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதோடு அவர்களை தாக்கி அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய தரவுகளை அழிக்க முற்பட்ட காரணத்திற்காக அவர்களது ஜாமீன்கள் மற்றும் முன் ஜாமீன்களை வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, இன்னும் மூன்று நாட்களுக்குள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றத்தை புரிந்த 19 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரை கிளை. இப்படி இவர்கள் ஆஜராகவில்லை என்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அது கிரிமினல் குற்றமாக மாறும் என்றும் சில சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதோடு இந்த வழக்கை பற்றி விசாரித்து தீர்ப்பு வழங்க கரூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பிற்கு இணங்காமல் மூன்று நாட்களுக்கு மேல் அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கண்கணிப்பில் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் மீது ஏண்டா கை வைத்தோம் என செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தினம் தினம் நினைத்து புலம்பி வருவதாகவும், அவர்கள் மீது வருமானவரித்துறையின் பிடி இறுக்கிக் கொண்டே செல்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.