கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விரிவாக்க பணியின் காரணமாக சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் என்எல்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது என்எல்சி இரண்டாவது பழுப்பு சுரங்கத்தை விரிவு படுத்துவதற்கான கால்வாய் அமைக்கும் பணிகளை கடலூரில் தொடங்கியது. இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் கால்வாய் அமைக்கும் வேலைகள் நிறுத்தப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்ததால் போராட்டம் தடை செய்யப்பட்டு பாமக கட்சியினர் கொதித்து எழுந்த நிலையில் அன்புமணி தலைமையில் பாமகவினர் ஆக்ரோஷ குரலில் போலீசாரை எதிர்த்தனர்.
இந்த நிலையில் என்எல்சி நுழைவு வாயில் பகுதியை பாமகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் என்எல்சிக்கு எதிராக பாமகவினர் விவசாயிகளின் ஆதங்கத்தை தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'என்எல்சியே வெளியேறு' என்று முழக்கமிட்டு தமிழகத்தில் இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கும்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சியில் விவசாய சங்கத்தை நடத்தி வருகிறார் என முதலமைச்சரை கடுமையாக சாடினார்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் வாகனம் தாக்கப்பட்ட நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியும் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து வட தமிழகம் முழுவதுமே பரபரப்பான சூழ்நிலையில் காணப்பட்டது.மேலும் இது குறித்து பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். என்எல்சி விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி பயிர் செய்ய உள்ள பயிர்களை ஜேசிபி கொண்ட அழித்து விவசாயிகளின் வாழ்வை கெடுத்த நிலையில் அதனை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற பாட்டாளி மக்கள் கட்சி போலீஸ் கடுமையாக தாக்கியதும் தண்ணீரைக் கொண்டு அடித்ததும் கண்டிக்கத்தக்கது என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டை சீரழிவுக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு இதைப் பற்றி கவலைப்படாமல் மெத்தனமாக இருந்து வருவதையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்எல்சி நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருவதை கைவிட்டு இதற்கு எதிராக சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏவான வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டது வடமாநில விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் திமுகவின் கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடி அலட்சியமற்று செயல்படுவதாக பேசியுள்ளார்.
வேல்முருகனின் இந்த பாமக ஆதரவு திமுகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலைமை தொடருமானால் வேல்முருகன் திமுக கூட்டணியை விட்டு சென்று விடுவார் என்றும் திமுக கூட்டணியில் தொடர்ந்து கட்சிகள் விலகி வருவதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.ஜே.கே பாரிவேந்தர் திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்த நிலையில் அடுத்தபடியாக வேல்முருகனும் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது திமுக கூட்டணியின் பலத்தை குறைப்பதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்ற தேர்தலிலும் இது நிச்சயம் திமுக கூட்டணிக்கு பேரிடியை தரும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.