மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு நண்பர்களுடன் சிறு நாடகங்களை மேடையில் அவ்வப்போது அரங்கேற்றி வந்தவர் அதற்கு பிறகு இவர் தந்தை இறந்து விட்டதால் மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தவருக்கு நடிகர் ராஜ்கிரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நடிகர் ராஜ்கிரன் கொடுத்த நம்பிக்கையால் சென்னைக்கு வந்த வடிவேலுக்கு தேவையான அனைத்தையும் ராஜ்கிரனே முதலில் செய்து கொடுத்துள்ளார். இத்தனை அடுத்து டி ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான வடிவேலுவை ராஜ்கிரன் தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து வடிவேலுவை முழு நேர காமெடியனாக திரையில் வர வாய்ப்பளித்தார். அதுமட்டுமின்றி இதே படத்தில் போடா போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடி தன் முதல் திரைப்படத்திலேயே நடிகராகவும் பாடகனாகவும் உருவெடுத்தார் வடிவேலு! இந்த படத்திற்கு அடுத்ததாகவே விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவிற்கு பண்ணையால் கதாபாத்திரத்தை வழங்கியதோடு தொடர்ச்சியாக பல படங்களுக்கு விஜயகாந்த் வடிவேலுவிற்கு வாய்ப்பு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வடிவேலின் நகைச்சுவை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற ஆரம்பித்தது இதனால் சின்ன கவுண்டர், வரவு எட்டணா செலவு பத்தணா, இளவரசன், சிங்காரவேலன், தேவர் மகன், காத்திருக்க நேரமில்லை, கிழக்கு சீமையிலே, நீலக்குயில், மகாராசன் என்று தொடர்ச்சியாக ஒரு வருடத்தில் இத்தனை படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவிற்கு வாய்ப்புகள் குவிந்தது. அதுவும் அக்காலத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் என்கிற இரு பெரும் காமெடி உலகின் ஜாமவான்கள் திரையை ஆக்கிரமித்திருந்த காலத்தில் மூன்றாவது நடிகராக வடிவேலு தனது இடத்தை பிடித்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் விஜயகாந்த், டி ராஜேந்திரன் மற்றும் ராஜ்கிரண். ஆனால் இந்த மூவரையும் தற்பொழுது நடிகர் வடிவேலு கண்டு கொள்ளாமல் இருப்பது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. முதலில் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்த பொழுது திமுகவுடன் கைகோர்த்த வடிவேலு விஜயகாந்த் குறித்து அவ்வளவு கேவலமான மற்றும் அவமதிக்கக் கூடிய கருத்துக்களை முன்வைத்தது சினிமா வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் சினிமா வட்டாரத்தில் விஜயகாந்த் குறித்து இதுவரை எவருமே அந்த அளவிற்கு அதாவது விஜயகாந்த் குறித்து சற்றும் குறை கூறும் அளவிற்கு கருத்துக்களை முன் வைத்ததில்லை! இதனை அடுத்து கடந்த வாரத்தில் கேப்டன் உயிரிழந்த செய்தியும் தமிழகம் முழுவதும் வருத்தத்தை ஏற்படுத்தியது அதற்கும் வடிவேலு எந்த ஒரு இரங்கல் பதிவையும் வெளியிடவில்லை அவருக்கு அஞ்சலி செலுத்தவும் வரவில்லை என்பது விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் 100 என்ற பாராட்டு விழாவில் கூட வடிவேலுவுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.இது குறித்து திரையுலக விமர்சகர்களிடம் கேட்டபோது வடிவேலு தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டு உச்சியில் இருந்த சமயம் அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டது திமுக, ஆனால் தற்போது வடிவேலு மார்க்கெட் இழந்துள்ளார் மேலும் திமுக வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது இந்த நிலையில் வடிவேலு கேப்டன் விரிவாகரம், ராஜ்கிரண் விவகாரம் போன்ற விவகாரங்களில் கெட்ட பெயர் எடுத்த காரணத்தினால் சில நாட்கள் வடிவேலுவை ஒதுக்கி வைக்க முடிவு செய்துவிட்டது இதனால் வடிவேலு தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது எனவும் கூறினார்கள். அறிவாலயத்தை நம்பி மோசம் போய்ட்டோமே என வடிவேலு தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதாகவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன.