Cinema

கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்..!

Sivakarthikeyan
Sivakarthikeyan

பொங்கல் விழா தமிழகத்தில் முன்னெடுத்துள்ளது, இதில் தொடர் 4 நாட்கள் வருவதால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திரைப்படத்திற்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள். இந்த பொங்கலுக்கு முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டுகொண்டு படத்தை வெளியிட முன்வந்துள்ளனர். படம் வெளியிட்டு கலெக்ஷனை அள்ள முன்னணி நடிகர்களும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை வந்தால் குறைந்தது இரண்டு படங்களாவது திரைக்கு வரும். அதில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எந்த படம் மக்களிடம் வரவேற்பு பெறுகிறதோ அந்த படம் தான் அந்த போட்டியில் வெற்றிபெறுகிறதோ அந்த நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.


பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வரும் 12ஆம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ், மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், சிவகார்த்திகேயனின் அயலான், அருண்விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன், தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்த 6 படங்களின் ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒன்றாக ஒரே நாளில் போட்டியிடுகிறது. இதில் அதிக வெற்றி எந்த படம் பெறும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கோலிவுட்டில் கேப்டன் மில்லர், அயலான் படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

அணைத்து படங்களும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக அமைந்திருப்பதால் மக்கள் அயலான் படத்திற்கு அதிகம் செல்வார்கள் என எதிர்பார்ப்பு கிளம்பியது ஆனால் இந்த படம் நாளைக்கு வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது. அயலான் படத்திற்கு பைனான்ஷியர் அசோஷியேஷன், டீ.ஆர்.எஸ் பிலிம்ஸ் போன்ற பலரிடம் சுமார் 85 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், சிவகார்த்திகேயன் அந்த தொகையை ஏற்க வேண்டும் அல்லது சிவகார்த்திகயேன் உத்தரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு படத்தை வெளியிட நிபந்தனை வெளியிட்டுள்ளனர். இதனால் நாளை வெளியாவதில் படத்திற்கு சிக்கல் ஏற்படுள்ளது.

முன்னதாக, சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமான் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்கு காரணமே அவர்தான் என சொன்னதில் இருந்து சினிமாவில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார் சிவகார்திகேயன். கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு அவரது படத்திற்கான சம்பள தொகையை பிடிப்பததாக தகவல் வந்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் சினிமா மார்கெட்டிங் குறைந்து வருவதால் முன்னணி இயக்குனர்கள் படத்தை தயாரிக்க முன்வருவதில்லை என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் வெள்ளி திரைக்கு வருவதை மிகபெரிய சவால்களை சந்தித்தார். ஆனாலும், அவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இப்படி சூழலில் ஒரு சின்னபெயர் நடிகர்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவர்களுக்கு பெரிய சிக்கல் ஏற்படுத்தும் என்பதை சிவகார்த்திகேயன் தற்போது அன்பவித்து வருகிறார்.