கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே என்ற பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரனாக இருக்கும் கேப்டன் தற்பொழுது இவ்வுலகில் இல்லை! தமிழ் திரை உலகின் முக்கிய பிரபலங்களும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த தீவுதிடலுக்கு வந்தனர், அந்த வரிசையில் நடிகர் விஜய் விஜயகாந்த் வரும்பொழுது விஜயகாந்தின் தொண்டர்களும் ரசிகர்களும் விஜய் கடுமையாக எதிர்த்தனர் விஜய் கேப்டனின் உடலை பார்க்கவே கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு வெளியே போ வெளியே போ என்ற கோஷத்தையும் அந்த அரங்கம் முழுவதும் உள்ள அனைவரும் விஜய்யின் அஞ்சலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலில் திக்கு முக்காட வைத்தவர் அப்பொழுதே விஜயை நோக்கி காலணிகள் எரியப்பட்டதும் விஜய்யை சிலர் அடித்தும் அவரை கூட்டல் நெரிசலில் இருந்து காப்பாற்றுவதற்கு பவுன்சர்கள் படாத பாடுபட்டதும் பெரும் பரபரப்பானது. இதனை அடுத்து விஜய் தரப்பில் இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் எதுவும் வெளியிட வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்ட போதிலும் சமூக வலைத்தளங்களில் விஜய் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொழுது சந்தித்த அவமதிப்புகள் அனைத்தும் வீடியோவாக வெளியானது.
ஏன் இந்த நிராகரிப்பை கேப்டனின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயை நோக்கி எழுப்ப வேண்டும் என்ற என்ற தேடல்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்ட பொழுது விஜய் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே படுதோல்வி அடைந்தபொழுது செந்தூரப் பாண்டி படத்தில் கேப்டன் விஜயுடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கொடுத்தார். கேப்டன் செய்த அந்த உதவியை சிறிதும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் படத்தில் விஜய் ஒரு ரோலில் நடிக்க கேட்ட பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்தது இவ்வளவு நாட்கள் வந்து பார்க்காமல் இரண்டு பிறகு வந்து கேப்டனை பார்க்கிறீர்களா என்ற கோபமும் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்ததாலே இந்த எதிர்ப்புகள் அங்கு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய்க்கு நிகழ்ந்த இந்த அவமதிப்புகள் குறித்து நடிகர் சங்கம் தரப்பில் இதுவரை எதுவும் பேசப்படாமல் இருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் சில மனிதர்கள் நூறு வயது வரை வாழ வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம் அப்படிப்பட்ட மனிதர்களின் ஒருவர் விஜயகாந்த் என்று விஜயகாந்தின் மரணத்திற்கு பெரும் வருத்தம் தெரிவித்த விஷாலிடம் விஜய் மீது செருப்பு எறியப்பட்டது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது யார் செருப்பை தூக்கி அடித்தார்கள் எதற்காக அடித்தார்கள் என்று யோசிக்க முடியாது, அதையும் தாண்டி அவருக்கு பிடித்த நடிகரை பார்க்க விஜய் சென்றிருக்கிறார் அதனை தவிர்த்து இருக்கலாம் ஆனால் கூட்டத்தில் நெரிசலில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது! கூட்டமானது அலைமோதி வரும்போதும் இதனை நாம் தவிர்க்க முடியாது என்றும் விஷால் கூறியுள்ளார். விஜய் அவ்வளவு தூரம் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று கூறிக் கொண்ட பிறகும் விஷால் இது பற்றி பேசியதும் கூட்ட நெருசலில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியாது என்ற வகையில் பேசியதும் எதற்காக என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் மேலும் விஜய் அரசியலில் காலடி எடுத்துவைக்க முயற்சி செய்துவருகையில் இப்படி விஜய் அவமதிக்கப்பட்ட விவகாரத்தை நடிகர் சங்கம் சார்பில் விஷால் பேசுவது தூண்டிவிடப்பட்டதா என கேள்விகள் எழுந்துள்ளது.