24 special

புஷ்வாணமாகிப்போன சமாதான தூது...! லீக்கான டெல்லி தகவல்கள்..!

mk stalin, arivalayam
mk stalin, arivalayam

செப்டம்பர் இரண்டாம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இந்த தலைப்பே என்னை மிகவும் ஈர்க்கிறது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைத்தால் கூட ஏற்றதாக இருக்காது சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் வைத்திருக்கிறீர்கள் அதற்கு பாராட்டுக்கள் என்று பேச ஆரம்பித்த அமைச்சர் உதயநிதி சனாதனத்தை பின்பற்றும் மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்து சமூகத்தில் இரு வேறு கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் வன்முறையை துளிர் விட வைக்கும் வகையிலும் அவர் பேசியிருந்தார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.


இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மகனான உதயநிதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றே வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர் பழங்குடியின பெண்களை பாதிக்கும் சனாதன கோட்பாடுகளை பற்றி,  அந்த கோட்பாட்டை தான் உதயநிதி ஒழிக்க வேண்டும் என்று கூறினாரே தவிர வேறு எந்த மதத்தையும் பற்றிய அவர் பேசவில்லை, பாஜக தான் திமுக மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இது போன்ற கருத்துக்களை பரப்பி வருவதாக உதயநிதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுகவின் பொது செயலாளர் மூத்த அமைச்சருமான துரைமுருகன் வேறு பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது திடீர் திடீரென்று ஏதேதோ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது திடீரென நாடாளுமன்றம் கூடுகிறது அதற்கான காரணம் என்னவென்று கேட்டால் ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி அதே வரிசையில் சென்று ஒரே அதிபர் பிரதமர் மோடி என்று கூறுவார்கள் போல இந்த நிலைமை நீடித்தால் நாடு முழுவதும் அவ்வளவுதான் இது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இவரைத் தொடர்ந்து திமுக எம் பி யும் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா சனாதனம் என்பது கொடிய நோயான எய்ட்ஸ் உருவாக்கக்கூடிய ஹச் ஐ வி வைரஸ் போன்றது என்றும் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என யாரும் இல்லை மதத்தின் பெயரில் மக்களை பிளவுபடுத்த எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் சக்தியாக திமுக உள்ளது திமுகவின் இளைஞர் அணி செயலாளராக அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட தற்போது அவர் பேசியிருந்த சனாதன ஒழிப்பு பற்றிய கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் உதயநிதிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். 

இதன் பின்னணியை விசாரித்த பொழுது திமுகவில் இருந்து டெல்லிக்கு சமாதான தூது சென்றதாகவும், அதற்கு டெல்லி உடன்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் வழக்குகளை தோண்ட வேண்டாம் என டெல்லிக்கு சமாதானம் செய்து கொள்ள தூது அனுப்பி உள்ளது திமுக தரப்பு ஆனால் அதற்கு டெல்லி உடன்படாமல் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம் என டெல்லி கை விரித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தற்பொழுது திமுக பாஜகவை எதிர்க்க ஆரம்பித்துவிட்டது பாஜகவிற்கு எதிராக இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டது என சில டெல்லி தகவல்கள் கிசுகிசுகின்றன.