அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை நீதிமன்றம் இரண்டுமே கை விரித்து விட்டன. இவருடைய ஜாமின் வழக்கை வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதித்து வந்த நிலையில் முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி அல்லியிடம் சென்ற போது செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதால் முதன்மை அமர்வு நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்ததோடு மீண்டும் என்.ஆர் இளங்கோ சிறப்பு நீதிமன்றத்தை நாடி சென்றார். ஆனால் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு கிடைக்காமல் அவர் புழல் சிறையில் தான் இருந்து வருகிறார் ஆனால் செந்தில் பாலாஜியின் வழக்கில் பல சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கில் இருந்து மீண்டு வரவே முடியாது அவருக்கு ஜாமின் மனு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பல சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது செந்தில் பாலாஜி வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது மேலும் செந்தில் பாலாஜி திமுகவிற்கு தலைவலி ஆக இருப்பார் என்பதை உணர்ந்த திமுக தலைமை வேண்டாம் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து அதுவும் குறிப்பாக அமைச்சர் பதவியில் இருந்து விலக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தேர்தல் முடிந்தவுடன் அவர் பதவியில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை அப்போது உள்ள நிலையை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு எதுக்கு பதவி மற்றும் சம்பளம் என எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியில்லை என வழக்கறிஞர் ராமச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பை வழங்கியது.
மேலும் அந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவரை அமைச்சரவையில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதை முதல்வர் மு க ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பை வழங்கியது.இப்படி செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறை தொடர்ந்து சோதனை நடத்தியது முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதை அடுத்து செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனுக்காக நீதிமன்றங்கள் தோறும் அலைந்து கொண்டிருக்கும் வரை அவரது வழக்கில் இன்னும் பல மறைந்துள்ள தகவல்கள் இருப்பதால்தான் இவ்வளவு காலமாக வழக்கு நீண்டு கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் எழுத்துள்ளன. இந்நிலையில் அவரது தம்பி அசோக் குமார் வேறு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பது அமலாக்கத்துறையை கோபப்படுத்தியுள்ளதால் இந்த வழக்கை முடிக்க கூடாது என்பதில் அமலாக்கத்துறை தீர்மானமாக உள்ளதாகவும் இந்நிலையில் திமுக தலைமை அவரது அமைச்சர் பதவியை பறிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் வந்த தகவல் செந்தில் பாலாஜிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் இந்த வழக்கில் இருந்தும் மீள்வது மிகவும் கடினம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பிற்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தியதுடன் அவரது அமைச்சர் பதவிக்கும் ஆப்பு வருவது மேலும் செந்தில் பாலாஜி தரப்பினரை திமுக தலைமை மீது கடுங்கோபம் அடைய செய்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி அமலாக்கத்துறை வசம் சிக்கும் பட்சத்தில் அவரது நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து செந்தில் பாலாஜி உட்பட அவரது தரப்பினர் புலம்பி வருவதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன....