24 special

வயலில் இறங்கி அண்ணாமலை செய்த சம்பவம்!...அடேடே இவர் தான் விவசாயி.....மக்கள் நெகிழ்ச்சி!

Annamalai Agri
Annamalai Agri

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய 'என் மண் என் மக்கள்" நடைபயணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.  இன்று தொடங்கிய யாத்திரை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் நடைப்பயணத்தை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குடமுருட்டி ஆற்றில் இறங்கி, காவிரிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.


அதனை தொடர்ந்து கருப்பூரில் விவசாயிகள் நாற்று நட்டு கொண்டிருந்தனர் அப்போது அண்ணாமலையும் விவசாயிகளுடன் விவசாயியாக மாறி நிலத்தில் இரங்கி நாற்று நட்டு விவசாயிகளுடன் டீ, வடை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை " தமிழகத்தில் என் மண் என மக்கள் பாதயாத்திரை 112வது தொகுதியாக திருவையாறு டெல்ட்டா பகுதிக்கு வந்துள்ளோம். கவிற்கி ஆறு எப்போதும் வற்ற கூடாது, டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நிரந்தரமாக காவிரி நீர் கிடைக்க 365 நாட்களுக்கும் கிடைக்க ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்து இந்த டெல்டா பகுதியில் பூஜை செய்து யாத்திரை தொடங்கியுள்ளோம் டெல்ட்டா பகுதிக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. பாரத பிரதமர் டெல்டா விவசாயிகளுக்கு எப்படி உறுதுணையாக உள்ளார் என்பதை மக்களுக்கு தெரிவிப்போம்.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை 5.25 லட்சம் டன் வரை நெல் வாங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 3 லட்சம் டன் குறைவாகும். இதற்கு காரணம் காவிரி நீர் வராததால் என்பதால் விவசயிகள் பாதித்துள்ளனர். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை குறியீடு இது காட்டுகிறது என்று கூறினார். மேலும், இந்த பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை அனுமதிக்க பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும். அனைத்து வகையிலும் மத்திய அரசு துணியாக இருக்கும் ஆனால் மணிலா அரசோ டெல்ட்டா விவசயிகளை வஞ்சிக்கிறது.

காவிரியில் மாநில அரசு தண்ணீர் பெற்று தர முடியாத நிலையில் இருக்கிறது. கண்டதை 70 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை அரசியல் காரணகளுக்காக நாம் விட்டு கொடுத்துவிட்டோம்" என்று தெரிவித்தார். அண்ணாமலையில் பயிர் நடும் வீடியோ இணயத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் இவர் தான் விவசாயி, நடக்க விவசாயி போன்று கரும்பு தோட்டத்தில் காலனி அணிந்து கொள்ளவில்லை என்று கமெண்ட்ஸை பதிவிட்டு வருகிறார்கள்.