24 special

டெல்லியில் எடுத்த புதிய திருப்பம்..! வானதி சீனிவாசன் போட்ட ட்விஸ்ட் ..!!

vanathi srinivasan
vanathi srinivasan

அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என பாஜக துணைத் தலைவர்களில் ஒருவரான வி பி துரைசாமி கூறியிருந்த நிலையில் எல்லாம் முடிஞ்சு போச்சு என கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்   குறிப்பிட்டது டெல்லியும் இறுதி முடிவு எடுத்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.முன்னதாக அவரை வழியனுப்ப வந்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது நேற்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி சம்பந்தமான விஷயங்களைத் தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து  கேட்டார்கள் எனவும் இதற்கு  முனபும் இதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து தென்னை பிரச்சினை குறித்து பேசியுள்ளதாகவும் கூறினார்.


மத்திய அரசு கோவைக்கும் கோவை தொழில் துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் தான் ஒரு எம்எல்ஏ. என்னுடைய வேலை இது என்பதால் இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்கிறேன் எனவும் கூறியதுடன்,கோவையில் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும் தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும் சுட்டிகாட்டினார்.நேற்றைய தினம் பாஜக வின் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மாநில தலைவர் இல்லாமல் நடைபெற்றது குறித்த குறித்து பேசிய வானதி, அது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் மாநிலத் தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்டத் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.இதேபோல் அதிமுகவுடன் கூட்டணி குறித்த பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கு, எல்லாம் முடிஞ்சு போச்சு எனவும் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.....!அதிமுகவுடன் கூட்டணி கிடையாது தனித்து தேர்தலை சந்தியுங்கள் என பாஜக தேசிய தலைமையும் மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதால் இந்த தகவலை வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.