Cinema

செல்லும் இடமெல்லாம் விமர்சிக்கிறாங்க...நடிகர் வருத்தத்துடன் பேச்சு!

sidharth
sidharth

தமிழில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கண் கலங்கிய நடிகர் சித்தார்த். இவர் நடித்த படம் "சித்தா" இந்த படம் தமிழ், கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த 28ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த படம் தெலுங்கில் மட்டும் வெளியாகவில்லை. தமிழில் பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து கலக்கி கொண்டு வரும் நடிகர் சித்தார்த், தற்போது சித்தா என்ற படத்தில் நடித்து கடந்த வாரம் வெளியாகி நல்ல வீரவேற்பை பெற்று வருகிறது. அண்ணனின் மகளை வளர்க்கும் ஹீரோவாக சித்தார்த் நடத்திற்கும் இந்த படத்தில் செண்டிமெண்ட்க்கு பஞ்சமில்லை. படம் வெளியாவதற்கு முன் கர்நாடகத்தில் புரொமோஷனுக்காக சென்ற சித்தார்த்தை, காவிரி விகாரத்தின் போது கர்நாடக அமைப்பினர் விழாவின் நடுவில் உள்ளே  நுழைந்து.


தமிழ் படம் கர்நாடகத்தில் வெளியாகாது உடனே வெளிய செல்லுங்கள் என கோஷம் எழுப்பி அவமதித்தனர். ஐந்து சம்பவத்திற்கு தமிழ் நடிகர்களும், கன்னட நடிகர்களும் சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.இந்த படத்தின்  புரொமோஷன் தமிழ், கனடா, மலையாளம், ஆந்திர, தெலுங்கானா, என நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தார். அந்த வகையில், புரொமோஷனுக்காக பேசிய சித்தார்த் தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சித்தா படத்தை பார்த்துவிட்டு நல்ல படம் இதுவரை இந்த மாதிரி படத்தை பார்க்கவில்லை என படத்தை வாங்கி விநியோகிஸ்தனர். கேரளாவில் நம்பர் ஒன் விநியோகிஸ்தரான கோகுலம் சினிமாஸ் படத்தை பார்த்துவிட்டு, 55 வருடங்களில் இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை என கூறி படத்தை வாங்கினார். கர்நாடகத்தில் கேஜிஎப் படத் தயாரிப்பாளர் படத்தை வாங்கி கொண்டனர்.ஆனால் தெலுங்கில் மட்டும் விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, பலரும், ‘சித்தார்த் படத்தை யார் திரையரங்குக்கு வந்து பார்க்க போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம் என்னுடைய படம் சிறந்த படமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறினேன். தெலுங்கிலும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக வேண்டியது.

சில பிரச்சனைகளின் காரணங்களால் திரை கிடைக்கவில்லை.  இறுதியாக ஏசியன் பிலிம்ஸின் சுனில் ‘சித்தா’ படத்தை பார்த்து அதன் தரத்தை உணர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து  நான் இப்படியான ஒரு நல்லபடத்தை இதுவரை உருவாக்கவில்லை. படத்தில் என்ன இருக்கிறது என்பதை விலகவில்லை. நீங்கள் சினிமாவை நம்பினால், சினிமாவை விரும்பினால் தயவு செய்து இந்தப்படத்தை சென்று பாருங்கள். படத்தை பார்த்துவிட்டு பிறகு சொல்லுங்கள் நான் இதுபோன்று படத்தை எடுக்க மாட்டேன் என கலங்கி கண்ணீர் விட்டார் இவரின் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கமெண்டில் கர்நாடகாவிலும் தமிழ் நடிகருக்கு மரியாதையை கொடுக்கவில்லை, இப்போது தெலுங்கிலும் அவமதிக்கின்றனர் கலங்காதே மரியாதை தானாக தேடி வரும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.