24 special

அதிமுக கூட்டணியில் நடக்கப்போகும் புதிய மாற்றம்..!

Stalin, Edappadi palanisamy
Stalin, Edappadi palanisamy

மக்களவை தேர்தலுக்காக அரசியல் களமே பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இது திமுக கூட்டணியை கலைக்க புதிய யுத்தி ஒன்றை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  


வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் பன்னிரண்டு தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், திமுக கடந்த முறை கொடுத்த தொகுதியை விட குறைவான தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கலாம் என கூறி வருகிறது. ஆனால், காங்கிரஸ் தாங்கள் கேட்கும் தொகுதியை விட குறைவான சீட் கொடுத்தால் வாங்குவதற்கு தயாராக இல்லை என தெரிகிறது. இதற்கிடையில் சமயம் பார்த்து அதிமுக கட்சி காங்கிரஸுக்கு தூது விட்டு வருவதாக சில தகவல் வெளியாகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்த அதிமுக எந்த வித பெரிய கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் மௌனம் காத்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுகவில் உள்ள கூட்டணிகளை நம்பி பிரிந்து வந்த அதிமுக தற்போது வரை தனிமையில் இருந்து வருகிறது. காங்கிரஸ், விசிக போன்ற கட்சி தமது பக்கம் வரும் என நினைத்து வந்த அதிமுக அப்படி யாரும் இதுவரை அதிமுக பக்கம் எட்டி பார்க்கவில்லை. காங்கிரஸ் கேட்கும் சீட் திமுக தராமல் இழுபறி நடத்துவதால் அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டில் தலைவர்களை மாற்றியது. தமிழகத்தில் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமித்ததும் எடப்பாடி பழனிச்சாமி இனி அதிமுக தேசிய கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

ஒரு பக்கம் திமுக காங்கிரஸுக்கு இழுபறி செய்து வருகிறது, இந்த நிலையில்தான் திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம். அதாவது, காங்கிரசை அதிமுக பக்கம் கொண்டு வாருங்கள் என்று அதிமுக தலைகளிடம் எடப்பாடி பேசி இருக்கிறாராம். அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக - காங்கிரஸ் இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை ஒரு பகுதியாக சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த பிறகு பேட்டியில் வைகை செல்வன் கூறியது, திமுக உடனான காங்கிரஸின் கூட்டணி கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளதாக, இதனை பார்க்கும் போது அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்பட போகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இது திமுக கட்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.