Cinema

தீயாகப் பரவிய வதந்தி! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சீரியல் நடிகை!

actor madhumitha
actor madhumitha

வழக்கமான மாமியார் மருமகள் சண்டை, காதலன் காதலர்களுக்கு இடையேயான சண்டை, திருமண பந்தம் குறித்த கதைகளை மட்டும் சீரியலாக எடுத்து வந்த தொலைக்காட்சியில் தற்பொழுது ஒரு மாறுபட்ட சீரியல் ஆக பெண்களின் முன்னேற்றத்தையும் பெண்கள் சுயமாக வேலை செய்து ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்திலிருந்து வெளியேறி தன்னையும் தன் பிள்ளைகளையும் தன் கணவரையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் வகையிலான ஒரு நாடகத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நாடகம் ஆரம்பத்தில் அதிக பார்வையாளர்களை பெறாத நிலையில் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு கொடுக்கப்படும் மௌசும் வரவேற்பும் அதிகரித்துக் கொண்டே சென்றது டிஆர்பி ரேட்டும் வேகமாக உச்சிக்கு சென்றது. அதாவது ஒளிபரப்பப்பட்ட சில தினங்களிலே மற்ற அனைத்து சீரியலையும் தாண்டி டாப் 5க்குள் சென்ற சீரியல்தான் எதிர்நீச்சல்! இந்த சீரியலில் முக்கிய கதாநாயகியாக நடித்து வரும் ஜனனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா.


இவரது நேர்த்தியான நடிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது மேலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே செயல்பட்டு வருகிறது ஏனென்றால் நாடகத்தை பார்ப்பதை விட மதுமிதாவை பார்ப்பதற்காகவே பல இளைஞர்கள் இந்த சீரியலை பார்ப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நடிகை மதுமிதா குறித்த பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் தனது நண்பருடன் மதுமிதா காரில் சென்னை சோழிங்கநல்லூர் சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலர் ரவிக்குமார் மீது மோதியுள்ளார். கார் மோதியதில் தனது வலது கால் தொடையிலும் இடது கை முட்டிகளும் காயமடைந்த இரண்டாம் நிலை காவலர் ரவிக்குமாரை அருகில் இருந்த குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இதனை அடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் நடிகை மதுமிதா மீது விபத்து ஏற்படுத்திய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்து ஆர்டிஓ சோதனைக்கு பின்பே ஒப்படைத்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் நடிகை மதுமிதா! இந்த செய்தி இணையங்களில் மற்றும் செய்திகளில் வெளியாக பரபரப்பான வதந்திகளும் தீயாக பரவியது. அதாவது தனது பாய் பிரண்டுடன் இரவில் குடித்துவிட்டு காரை ஓட்டி சென்ற மதுமிதா காவலரை பலமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்ற பல வதந்திகள் பரவியது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இவை அனைத்தும் வதந்தி என்பதை நடிகை மதுமிதாவே தற்போது கூறி அதனை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். அதாவது விபத்து நடந்தது உண்மைதான் ஆனால் பெரிய அளவிலான விபத்துகள் நடக்கவில்லை அதிலும் குறிப்பாக நான் குடிக்கவில்லை எனக்கு குடிப்பழக்கமும் கிடையாது விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது அவரும் நலமாக இருக்கிறார் நானும் நலமாக இருக்கிறேன் அதனால் என்னை குறித்து வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பேசியிருந்தார் நடிகை மதுமிதா! 

அதே சமயத்தில், நடிகை மதுமிதா ஓட்டி வந்த கார் அவருடைய நண்பருடையது என்றும் புது காரை வாங்கிய பிறகு பூஜை போட கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் எதிர் திசையில் காவலர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது மேலும் நடிகையிடம் ஓட்டுனர் உரிமமும் உள்ளது அவர் குடிபோதையில் இல்லை என்ற தகவலையும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எப்படி இவரது வதந்தி சமூக வலைதளம் முழுவதும் வைரலானதோ அதேபோன்று இவை அனைத்தும் வதந்தி என்பதும் உண்மையான தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது மேலும் நடிகை மதுமிதா பேசிய வீடியோவும் தற்போது வைரல் ஆகியுள்ளது.