24 special

ஜோதி மணியை ஓடவிட்ட பாஜகவினர்!

jothimani, pmmodi
jothimani, pmmodi

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகி தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்தால் தீவிர படுத்தப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது இன்னும் சில கட்சிகள் தங்கள் கூட்டணியையும் அல்லது தனித்து போட்டியிடுவதையும் அறிவித்து விட்டனர் ஏன் சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். இருப்பினும் பாஜக திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக போன்ற தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த இறுதி அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை இருப்பினும் சில கட்சிகள் இணைவதும் சில கட்சிகள் பிரிவதும் குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது. 


அதே சமயத்தில் தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமைத்த இண்டி கூட்டணி தற்போது பயனற்று போய் அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்தது இது இண்டி கூட்டணியின் பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது இதனால் திமுக தன் பாதையில் தமிழகத்தில் தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது அதே போன்று திமுகவின் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் தற்போது நாம் பிடித்துள்ள இடத்தை தக்கவைத்து மேலும் பல இடங்களுக்கு முன்னேறி செல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இதன் காரணமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் இதுவரை போன்று அல்லாமல் திமுகவிடம் தற்போது நான்கு தொகுதிகளை கேட்டுள்ளார். 

அதேபோன்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பல நிர்வாகிகள் பல தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்றும் ஏற்கனவே நின்றது எம்பிகளை மீண்டும் இந்த தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்க கூடாது என்றும் கூறி வருகின்றனர் அந்த பட்டியலில் கரூர் எம்பி ஜோதி மணியும் இடம்பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆக உள்ள ஜோதிமணி கரூர் மாவட்டத்தில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருபவர் ஏனென்றால் இத்தனை வருடங்கள் மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியையும் எட்டி கூட பார்க்காத ஜோதிமணி தேர்தல் வரவுள்ள காரணத்தினால் கடந்த சில நாட்களாகவே கரூர் பக்கம் எட்டிப் பார்க்கிறாராம் இதனால் டென்ஷனான கரூர் மக்கள் அவரை எந்த இடத்தில் பார்த்தாலும் விமர்சித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியும் திருப்பி அனுப்பி வைத்து வருகிறார்கள். இப்படி கரூரில் எம்பி ஜோதிமணி எங்கு கால் வைத்தாலும் அவருக்கு எதிரான வெடிகள் வெடித்து வருகிற காரணத்தினால் கரூர் பக்கம் செல்லாமல் சரி நமக்கு அடுத்த கரூர் தொகுதியையும் கொடுக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் மற்ற சில தொகுதிகளுக்கும் சென்று தனது எம்பி பதவியை மீண்டும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், மத்திய அரசின் அம்பரீத் பாரத் திட்டத்தின் கீழ் ஏழு கோடி ரூபாய் செலவில் பல ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் இந்த திட்டத்தின் கீழ் மணப்பாறை ரயில் நிலையமும் சீரமைக்கப்படுகிறது இதனால் இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணியும் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்பொழுது மணப்பாறையை போன்று குஜிலியம்பாறை, வடமதுரை போன்ற ரயில் நிலையங்களையும் சீரமைக்க வேண்டும் மக்களுக்காக பணியாற்றுகிறோம் மக்களின் வரிப்பணத்தில் பணிகளை செய்கிறோம் என்றால் மக்களுக்கு என்ன தேவையோ அதை தான் செய்ய வேண்டும் அதை விடுத்து விட்டு இந்த பகுதிகளில் எல்லாம் அதிக அளவில் பயணிகள் இல்லை என மத்திய அரசு காரணம் கூறுவது ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் ஜோதிமணி பேசிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஜோதிமணிக்கு எதிரான கோஷங்களை இட ஆரம்பித்தனர். இதனால் மேடையில் அமர்ந்த ஜோதிமணி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட சென்றார் இருப்பினும் ஜோதிமணி கார் ஏறி விழாவை விட்டு செல்லும் வரையிலும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் குறையவே இல்லை! இதனால் ஜோதிமணி தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது ஏனென்றால் கரூர் பக்கம் சென்றால்தான் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள் என்றால் மற்ற எந்த பகுதியிலும் பாஜகவினர்  நம்மை காலூன்ற விட மாட்டார்கள் என்று புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.