சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நான்கு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எம்பி எம்எல்ஏகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் எந்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டபோது உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை நடத்தும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் நீதிபதி அல்லி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனுவின் முக்கிய கருத்தாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தபோது அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் ஜாமீன் வழங்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது அதாவது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை காரணம் காட்டி ஜாமீன் வாங்கிவிடலாம் என்று செந்தில் பாலாஜி தரப்பு நினைத்துக் கொண்டிருக்கையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண்குமார் குறுகிய காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்,
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்று மாதங்களுக்கு பிறகு அவருக்கு ஜாமின் கிடைப்பதற்கு செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது தான் செந்தில் பாலாஜி தான் கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டு ஜாமினுக்கு விண்ணப்பித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் அமலாக்க துறையை விளக்கம் அளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது மேலும் இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசிய போது அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரையும் அமைச்சர் பதவியில் தான் உள்ளார் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு திமுக சார்பில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை இதில் அவரது தம்பி அசோக்குமார் வேறு தலைமறைவாகியுள்ளார் எனவே அசோக்குமாரை தேடும் பணிகளில் அமலாக்கத்துறையினர் தங்கள் சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.
இப்படி இருப்பவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றும் ஜாமின் கொடுத்து விட்டால் சாட்சியங்களை கலைப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு விடுவார்கள் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இப்படி அமலாக்கத்துறை கூறிவிட்டால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது குதிரை கொம்பாகிவிடும் எனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு பெரிய அளவிலான திருப்பத்தை ஏற்படுத்த தயாராகி விட்டது என்று செய்திகள் கூறுகின்றன. இது மட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜியின் வழக்கில் பல சிக்கல்கள் மற்றும் புதிர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது என்பதால் இவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற பேச்சுகளும் ஒரு பக்கம் எழுந்துள்ளன மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேறு செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதில் இருந்து கை விரித்து விட்டார் என்பதால் செந்தில் பாலாஜியின் தரப்பு மற்றும் அவரது குடும்பம் திமுக மீது கடுப்பிலிருந்து வருகின்றனர்இந்த நிலையில் ஜாமீன் கேட்டு காத்திருக்கும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கி பல முக்கிய கோப்புகளை கைப்பற்றியுள்ளது என வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.