24 special

தம்பி சும்மா உளறக்கூடாது..! உதய்க்கு ஆம் ஆத்மீ விட்ட உதை...!

udhayanithi, am athmi katchi
udhayanithi, am athmi katchi

தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் பொதுவாக மக்களின் மத்தியில் பின்பற்றப்படும் சனாதன தர்மத்தை குறித்து தவறாக பேசியது மட்டுமல்லாமல் அவர்களை ஒழித்தே ஆக வேண்டும் சாதனத்தை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல ஒழிப்பது தான் நல்லது என்று கூறி சனாதனத்தை டெங்கு மலேரியா கொரோனா போன்ற கொடிய நோய்களுடன் ஒப்பிட்டு அவற்றை அழிப்பது போல சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என திட்டவட்டமாக சனாதன எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அவருக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் பற்றி எரிய ஆரம்பித்தது. தமிழகத்தில் உதயநிதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு அதே மேடையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்து கடந்த செப்டம்பர் 11ம் தேதி அன்று முற்றுகை போராட்டம் ஒன்ரை நடத்தி முடித்தது தமிழக பாஜக.


முன்னதாக I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் திமுக, அதன் முக்கிய அமைச்சர் ஒருவர் அனைத்து மக்களை சமமாக நடத்த வேண்டும் என்பதையும் தாண்டி அனைத்து மதத்தினரையும் இந்த கருத்துக்களையும் கூறி புண்படுத்தக் கூடாது என்பதையும் தாண்டி அவர் பேசியுள்ளது ஏற்புடையது அல்ல இவரின் கருத்திற்கு I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த கருத்துகளும் உடன்படுகிறதா என்று விமர்சனங்களும் அதற்கு எதிரான எதிர்ப்புகளும் தமிழகத்தில் எழ ஆரம்பித்த பொழுது, உதயநிதி கூறியது மிகவும் பொறுப்பற்ற செயல், அவர் ஜூனியர் அரசியல்வாதியாக உள்ளார், இவர் இதனை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம், அவரது கருத்தை நாங்கள் ஏற்க போவது கிடையாது, எங்கள் கட்சி உடன்படவில்லை, அனைத்து மதத்தினரையும் சமமாக மதிப்பதே எங்கள் கட்சியின் கோட்பாடு ஆனால் மற்ற கட்சி தெரிவிப்பதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது! என I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியாக கருதப்படுகின்ற டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்  உதயநிதி கூறிய கருத்திற்கு எதிராக இறங்கியுள்ளது, அதாவது சனாதன தர்மத்தை ஆதரிப்பவனாக சனாதனம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு எதிர்க்கிறேன் என்றும், அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும் எந்த மதத்தின் மீதும் இது போன்ற கருத்துக்களை கூறுவதை நாம் தவிர்க்க வேண்டும், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு போன்ற பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்வதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாநிலத்தில் இருக்கும் சிறிய தலைவர் கூறிய கருத்தை கூட்டணியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக கூற முடியாது என்று ஆம் ஆத்மி எம் பி ராகவ் சாதா உதயநிதி கருத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரவால் தேர்தல் சமயத்தின் பொழுது அனுமான் சாலிசா பாடினார் இந்து மதத்தின் ஓட்டு வங்கியை பெரிதும் மதிப்பவர் அவர், இப்படி I.N.D.I.A கூட்டணி சேர்ந்த கட்சிகள் எதிர்ப்புகளை பட்டியலிட்டு தெரிவித்து வருவதால் திமுகவிற்கு இந்த கூட்டணியில் இருந்து விளக்கி வைக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அந்த கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக திகழ்கின்ற ஆம் ஆத்மியும் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது திமுகவிற்கு பெரும் ஆபத்து என்றும் இதனால் தேசிய அளவில் கூட்டணி வைத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைக்கப் போகிறது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் உதயநிதி இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் திமுகவை கண்டிப்பாக I.N.D.I.A கூட்டணி வெளியேற்றி விடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.