உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியது தான் நாடு முழுவதும் தற்போது பேசு பொருளாகியுள்ளது, மேலும் உதயநிதியை கண்டித்து இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலினை இனிமேலும் இது குறித்து பேச வேண்டாம் என்று எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தபடியாக ஜி 20 மாநாட்டிற்காக டெல்லி சென்றார். இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசியதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை வரிசை கட்டி அடுக்கிக் கொண்டு வரும் நிலையில் I.N.D.I.A கூட்டணியில் இருந்தே திமுகவிற்கான எதிர்ப்புகள் பெரிய அளவில் வெடித்துள்ளன.இவ்வளவு ஏன் தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்தே உதயநிதிக்கு சனாதன தர்மம் குறித்த பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது புரியாமல் பேசுகின்றனர் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமே கூறும் அளவிற்கு திமுக அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளை சந்தித்துவிட்டது.இந்த நிலையில் சீமான் முதல்வரின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
'டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரை அழைக்காத பட்சத்தில் தமிழகத்திலிருந்து இந்தியா கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர் ஏன் சென்று உள்ளார் என்ற கேள்வியை எழுப்பியதுடன் தென் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் யாரையும் அழைக்காத பட்சத்தில் சனாதனத்தை எதிர்க்கும் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றதுடன் மட்டுமல்லாமல் சனாதனத்தை ஆதரிக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அருகில் பேசிக்கொண்டிருக்கும் காட்சியை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் மேலும் தவித்த வாய்க்கு தண்ணி தராமல் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸை எதிர்த்து அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகள் மற்றும் மக்களுக்கு ஸ்டாலின் துரோகம் செய்கிறார் என்ற பாணியில் சீமான் விமர்சித்துள்ளார். மேலும் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் சனாதனத்தை ஆதரிப்பவர்கள் என இருவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியில் இருக்கும்போது அவர்கள் கொடுக்கின்ற ஆயிரத்திற்கும் 500க்கும் ஓட்டு போடுவதற்கு நாங்கள் தான் கிடைத்தோமா என்றும் ஆக சனாதனத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இரண்டு பேருக்கும் மக்கள் ஓட்டு போட வேண்டுமா என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தற்போது முதல்வர் டெல்லி சென்றதற்கு முக்கிய காரணம் சனாதனம் பற்றிய பேச்சை மீண்டும் பெரிதாக்காமல் மூடி மறைப்பதற்கு தான் என்றும் கடுமையாக சீமான் விமர்சித்துள்ளார்.
முதல்வர் டெல்லி சென்று ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பின்னணி என்ன என்று விசாரித்த போது கூட உதயநிதி சனாதனம் பற்றி பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் திமுக கட்சி மற்றும் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதையெல்லாம் எப்படி சரி செய்யலாம் என்று யோசித்தபோது எப்படியாவது பாரத பிரதமர் மோடியை சந்தித்து சமாதானம் பேசி சரணடைந்து விட வேண்டும் என்று திமுக தலைமை திட்டமிட்டதன் அடிப்படையில் தான் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் டெல்லிக்கு சென்று திரும்பியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் வெள்ளைக்கொடி காட்டிய முதல்வருக்கு பாஜக தலைமை முடியாது என கை விரித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சனாதன விவகாரத்தை கையில் எடுத்து பேசியதற்கு திமுக இனிதான் விளைவுகளை அனுபவிக்கும் எனவும் இந்த விவகாரத்தை டெல்லி மேலிடம் லேசில் விடப்போவதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக வாழ்நாள் தவறை செய்துவிட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.