அரசு அதிகாரிகள் மீது கைவைத்தால் சட்டம் சும்மா விடாது என்ற பேச்சு தற்போது செந்தில் பாலாஜி விஷயத்தில் மிக பெரிய அளவில் திருப்பு முனையை உண்டாக்கி இருக்கிறது.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெண் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கைவைத்ததும் அவர்கள் கைப்பற்றிய பெண் டிரைவ் தொடங்கி, பணத்தை செந்தில் பாலாஜி தரப்பினர் பறித்து சென்றநிலையில் அது குறித்து நீதி மன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரித் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த், துணை இயக்குனர் யோக பிரியங்கா, ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் மற்றும் காயத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் பல தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன அதில்,கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அசோக்குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் வீடுகளில் மே 25-ல் சோதனை நடத்தினோம். சோதனை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடிக்கும் அதிக பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனை 11 மணி நேரம் நடைபெற்றது. இதனால் சோதனை நடந்த வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடினர். அங்கிருந்து கலைந்து போகுமாறு போலீஸார் கூறியதை அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் கூட்டத்தை கலைந்து போகுமாறு கூறியபோது அந்தக் கூட்டம் வருமான வரித்துறை அதிகாரிகளை மோசமாக பேசி, தாக்கவும் செய்தனர். எங்களிடமிருந்து லேப்டாப், 5 பென் டிரைவ் ஆகியற்றை பறித்து சென்றனர்.
அந்த பென் டிரைவ்களில் அரசுக்கு சொந்தமான முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்தச் சம்பவம் நடைபெற்ற போது தமிழக போலீஸாரின் உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. கூட்டம் அதிகரித்ததும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் வெளியேறினர். மறுநாள் சிஆர்பிஎப் வீரர்களின் உதவியுடன் சோதனை நடத்தினோம்.
பின்னர் எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட லேப்டாப் மற்றும் பென் டிரைவ்கள் திரும்ப தரப்பட்டது. அந்த பென் டிரைவ்களில் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. அவைகள் பார்மட் செய்யப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் பலரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் வழங்க வருமான வரித் துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டியது, ஆவணங்களை பறித்தது, தரவுகளை அழித்தது உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது சரியல்ல. எனவே இந்த வழக்கில் 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் தான்தோணிமலை, உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஜாமீன், முன்ஜாமீன் பெற்ற 19 பேர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு போட்டார்.இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதால் இந்த வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்னா ரெட்டி எவ்வாறு தனது அமைச்சர் பதவியை இழந்தாரோ அதே போல் கரூர் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த மேயர் துணை மேயர் ஆகியோறும் இந்த வழக்கில் சேர்க்கவும் அவர்கள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து நீதி மன்றதை நாடவும் IT அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதால்.
விரைவில் அடுத்த திருப்பம் உண்டாகும் என்று கூறப்படுகிறது, கட்சி பலத்தை IT அதிகாரிகளிடம் காட்டி பல நபர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை இழக்க போவது உறுதி என்கின்றனர் வருமான வரித்துரை தொடர்ந்த வழக்கின் பின்புலம் அறிந்தவர்கள்.