24 special

திருமாவளவனை சூழ்ந்த விஜய் ரசிகர்கள்...!ரூட்டை மாற்றிய திருமா...!

Thirumavalavan,actor vijay
Thirumavalavan,actor vijay

விஜயின் சமீபத்திய அரசியல் பேச்சை வரவேற்ற அரசியல் தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர் விஜய் மாணவர்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களை பேசி ஒரு மணி நேரம் கடப்பதற்குள் விஜய் பேச்சை வரவேற்று பேசினார் திருமா.திருமா விஜய் பேச்சை வரவேற்று பேசியதை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டர்களே விரும்பாமல் எதிர்ப்பை பதிவு செய்தனர்  . அண்ணே நீங்கள் எத்தனை வருஷம் அரசியலில் இருக்கிறீர்கள் நீங்கள் விஜயை வரவேற்கலாம் எனவும் கேள்வி எழுப்பினர்.


இந்த சூழலில் தான் பல்டி அடித்து இருக்கிறார் திருமா இன்று பேசும்ம்போது ”பொதுவாழ்க்கைக்கு வரக்கூடியவர் எந்த காலத்திலும் வரலாம். நடிகர் விஜய், மாணவர்களிடம் கோவல்கர், சாவர்க்கர் போன்றவர்களை பற்றிக் கூறாமல், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை படிக்க சொல்லியிருக்கிறார். அதனை வரவேற்கிறோம்.

அதேநேரத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஆனால் சினிமா பாப்புலாரிட்டி இருந்தால் போதும், முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்துடன் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவர்கள் தங்களது தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கேரளாவில் மம்மூட்டி, மோகன் லால் ஆகட்டும், கர்நாடகாவில் ராஜ்குமார் ஆகட்டும், இந்தியில் அமிதாப் பச்சன் ஆகட்டும் அவர்கள் யாருமே தங்களது சினிமா பாப்புலாரிட்டியை வைத்து அரசியலுக்கு வர நினைக்கவில்லை.எம்.ஜி.ஆர். என்.டி.ஆர் வேறு ரகம். அவர்கள் பாணியிலேயே மற்றவர்கள் வந்துவிட முடியாது. தமிழ்நாட்டில் அப்படி அரசியலுக்கு வந்தவர்கள் பின்வாங்கியதை நாம் பார்த்திருக்கிறோம்.

மக்களுக்கு தொண்டு செய்து, தியாகங்கள் செய்து மக்களுக்காக சிறைக்கு சென்ற எத்தனையோ தலைவர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் எளிதாக பின்னுக்கு தள்ளி, முதல்வர் ஆகிவிடலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர். இந்த நினைப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது.” என்று ஆதங்கத்துடன் கூறினார்.திருமா இப்படி ஆதங்கமாக பேச இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது ஒன்று உதயநிதி விஜயின் அரசியல் வருகையை விரும்பாதது மற்றொன்று விஜய் திருமாவளவன் வரவேற்று பேசிய நிலையில் சிறு நன்றி கூட தெரிவிக்காத காரணத்தால் திருமாவளவன் ஆதங்கம் அடைந்து தற்போது விஜய்யின் அரசியல் வருகையை எதிர்த்து மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

திருமாவளவன் விஜய் குறித்து கருத்து தெரிவிக்க சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பலரும் சூழ்ந்து திருமாவளவனை விமர்சனம் செய்து வருகின்றனர்.