லஷ்கர் இ தொய்பா அல்கய்தா உலகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இருந்து வரும் சூழலில் புதிதாக ஒரு தீவிரவாத அமைப்பு மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக இருந்தது என்று பொறுப்பேற்றுள்ளது இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.
இம்மாதம் 19ஆம் தேதி மங்களூரில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது இந்த குண்டு வெடிப்பில் புருஷோத்தம் என்ற ஆட்டோ டிரைவரும் நடைபெறும் ஷாரிக் என்ற இளைஞனும் படுகாயம் அடைந்தனர்.
இதை அடுத்து nia விசாரணை வளையத்தில் உள்ள ஷாரிக் முதலில் பிரேம் ராஜ் என்ற பெயருடனும் வாட்சப் டிபியில் ஈஷா யோகா மையத்தின் புகைப்படத்தையும் வைத்து குழப்பமுயன்றுள்ளான்.
பின்னர் அவன் பெயர் ஷாரிக் என்பதும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி உட்பட ஆறு இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டான் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த தீவிரவாத தாக்குதல் முயற்சிக்கு ஒரு புதிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அந்த அமைப்பின் பெயர் இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் என்பதாகும்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கத்ரிக்கோயில் என்ற இன்று இடத்தில் ஷாரிக் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார் என்றும் இலக்கை அவர் அடையாவிட்டாலும் நாங்கள் இதை வெற்றியாகவே கருதுகிறோம் என்று தங்களது அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்
இதுகுறித்து நம் மாநில டிஜிபி கூறுகையில் உண்மையிலேயே இந்த புதிய அமைப்பானது இருக்கிறதா அல்லது விசாரணையை திசை திருப்ப இதுபோன்ற அமைப்பின் பெயர் கூறப்படுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் கர்நாடகாவில் இந்த மாதம் என இரண்டு தீவிரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இலக்கை அடையாமல் முன்னரே வெடித்ததால் பெரிய அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன.எனவே இதன் பிறகு அந்தந்த மாநில உளவுத்துறையும் தேசிய புலனாய்வு முகமையும் விழிப்புடன் செயல்பட்டு இந்த தீவிரவாத அமைப்புகளை கண்டறிந்து கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
- அன்னக்கிளி