உட்கட்சி பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் அதிமுக மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்து வருவது கண்கூடாகியுள்ளது இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே கூறி வருகிறது இதே நிலை நீடித்தால் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுமோ என்ற எண்ணத்தில் திடீரென்று விழித்துக் கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு பத்து பக்க புகார் மனுவை எடுத்துக்கொண்டு ஆளுநர் அலுவலகத்தில் சென்று அளித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது போதை பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்துவிட்டது பேனர் அமைப்பதில் மெகா ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு பத்து பக்க புகார் மனுவை அவர் ஆளுநர் மாளிகையில் திரு ஆர் என் ரவியை சந்தித்து வழங்கினார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களிலேயே பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார் இதற்கு Nia விசாரணை வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார் இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக மிக தாமதமாகவே இது குறித்து தன் கருத்தை தெரிவித்தது.
திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் தமிழகத்தில் அரசியலுக்கான களம் என்றிருந்த சூழலில் அண்ணாமலை அவர்கள் தலைமையற்ற பிறகு தற்போது நிலைமை மாறி வருகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் என்று சொல்வது போல் அண்ணாமலை அவர்களின் நடவடிக்கை துரிதமாக இருக்கிறது ஆனால் உடனடியாக செயல்பட வேண்டிய எதிர்க்கட்சி மிக தாமதமாக செயல்பட்டு வருகிறது. இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் தான் ஒரு வேளை better late than never என்ற ஆங்கில மொழிக்கு ஏற்ப தாமதமானாலும் எதிர்க்கட்சி தன் பணியை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆளுநரை சந்தித்து ஆளுங்கட்சிக்கு எதிராக அந்த பத்து பக்க அறிக்கையை ஆளுநரிடம் திரு எடப்பாடி பழனிசாமி வழங்கி இருக்கிறார்.
இவ்வாறு ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவதில் இத்தனை தாமதம் மேற்கொண்டால் அது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என்று தொண்டர்கள் மத்தியில் ஒரு கலக்கம் ஏற்பட்டுள்ளது.உட்கட்சி பூசலலை ஒருபுறம் வைத்து ஆளும்கட்சி செய்யும் தவறை உடனடியாக கண்டித்து அதற்கான தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தால் தான் அதிமுக அடுத்து வரும் தேர்தல்களில் ஒரு வலுவான கட்சியாக இருக்கும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
- அன்னக்கிளி