24 special

மங்களூர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறித்து தீவிரவாத அமைப்பு தெரிவித்த கருத்தை பாருங்கள்..!


கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்தது. கோவை குண்டுவெடிப்பும் மங்களூர் குண்டு வெடிப்பும், ஒரே சம்பவம் போல இருப்பதால் , கர்நாடக மாநில போலீசார், தமிழக போலீசார் மற்றும். மதிய உளவு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IRC என்ற இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில்  பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் பெயரில் சோசியல் மீடியாக்களில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஷாரிக் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்


எங்கள் முஜாஹித் சகோதரர் ஷாரிக் மங்களூர் கத்திரிக்கோவிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார் ஆனால் திட்டம் பூர்த்தியாகாமல் முன்பே வெடித்து விட்டது. திட்டமிட்டபடி வெடிக்காமல் போனாலும் இதை நாங்கள் வெற்றியாகவே பார்க்கிறோம்.  உங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் நாங்கள் மீண்டும் தாக்குதல் நடத்துவோம். 

எதற்காக இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் என்று கேட்பவர்களுக்கு, எங்கள் மதத்தில் தலையிடுவதாலும், எங்கள் மதத்தினர் படுகொலை செய்யப்படுவதாலும், மீது வெளிப்படையான தாக்குதலும் நாங்கள் இந்த போரை தொடங்கியுள்ளோம். இதைவிட பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்று அறிக்கையில் கூறியுள்ளது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக என்.ஐ.யே மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.புதிய பயங்கரவாத அமைப்பின் அறிக்கை குறித்து கர்நாடக கூடுதல் டிஜிபி அலோக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் , புதிய பயங்கரவாத அமைப்பு உண்மையிலேயே உள்ளதா ? இல்லையா என்று தெரியவில்லை, இந்த அறிக்கை உண்மை தானா ? என்று என்ஐயே உதவியை கேட்டிருக்கிறோம் மேலும் நாங்களும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் ஷாரிக்கின் செல்போனை  கர்நாடக போலீசார் கைப்பற்றி நடத்திய சோதனையில் அவர் யார் யாருடன் பேசினார்? எங்கிருந்தலாம் அவருக்கு அழைப்புகள் வந்தன? மேலும் இன்டர்நெட்டில் என்னவெல்லாம் தேடினார் என்று சோதனையில் தெரியவந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் மூன்று கோவில்கள் உட்பட ஆறு இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த ஷாரிக் சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மங்களூரில் உள்ள மஞ்சுநாதர் கோவில், கோகர்ணாத கோவில், ஹலோ மங்களாதேவி கோவில், மங்களூர் பஸ் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மண்ணை கொட்டா பகுதியில் உள்ள சாந்தி நிகேதன் அரங்கம் ஆகிய இடங்களைப் பற்றி இணையதளத்தில் கூகுளில் தேடி இருப்பதும், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் திட்டி உள்ளது தெரிய வந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த 19ஆம் தேதி கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மங்களூரில் சுற்றுப்பயணம் செய்திருந்தார். அதே நேரத்தில் சாந்தி நிகேதன் அரங்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பசவராஜ் பொம்மை கலந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தார் ஆனால் அந்த கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஷாரிக்கின் ஸ்கெட்ச் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைகா ? அல்லது ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கா என்றும், ஷாரிக்கின் தமிழ்நாட்டு தொடர்புகள் பற்றியும் விசாரித்து வருவதாக போலீஸ் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்குமாறு என்ஐயே விடம் கர்நாடக அரசு ஒப்படைத்த சூழ்நிலையில் என்ஐயே அதிகாரிகளும் , ஷாரிக், காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் ஷாரிக் போலியாக ஆதார் எண் மற்றும் சிம் கார்டை பயன்படுத்தி  ய ஊட்டி ஆசிரியர் சுரேந்திரனையும்  விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஷாரரிக்கின் செல்போனில் ஜாகிர் நாயக் பேசிய வீடியோக்களை சேமித்து வைத்துள்ளதும், ஜாகிர் நாயக்கின் பேச்சு அவரை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என்றும், டார்க் நெட் இணையதளத்தை பயன்படுத்தியதும், அதன் மூலமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்றும்,  வெடி பொருட்கள் வாங்க உபயோகப்படுத்தி இருக்கலாம் என்றும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஆந்திரா கேரளா,கர்நாடகா,  தமிழ்நாடு என தென் மாநிலங்களில் சென்று பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றதாகவும் போலீஸ் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Gokulakrishnan S