‘டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் ஊழல் குறித்து புதிய போஸ்டர் ஒன்றை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது’.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் “மோடியை அகற்று, நாட்டை காப்பாற்று” என்ற வசனமுடைய ஆயிரக்கணகான போஸ்டர்களை ஒட்டினார்கள்.
அதனை தொடர்ந்து விசாரனையை மேற்கொண்ட டெல்லி போலீஸார், அந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் யார்? என்று கண்டுபிடித்து 100-க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்களையும் போலீஸ் அதிகாரிகள் பதிவுசெய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியினர், ‘100-க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்களை போடும் அளவிற்கு இந்த போஸ்டரில் அப்படி என்ன? ஆட்சேபனை உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்திருக்க துளியளவும் வாய்ப்பு இல்லை’ என்று ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டிருந்தனர்.
மேலும் “இது நரேந்திர மோடியின் சர்வாதிகாரத்தை காட்டுகிறதாகவும், ஒரு போஸ்டருக்காக பிரதமர் நரேந்திர் மோடி ஏன் இப்படி பயப்படுகிறார்?? எனவும் ஆம் ஆத்மி கட்சி அப்போதே கேள்வி எழுப்பியிருந்தது”.
இந்நிலையில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ஆத் ஆத்மி கட்சியினர் டெல்லியில் போஸ்டர்களை ஒட்டியதற்கு பதலடி கொடுக்கும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் குறித்து
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும், துணை முதல்வராக இருந்து மதுக்கொள்கை வழக்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் இருக்கும் மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள போஸ்டரை பாஜக தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது”.
மேலும் “பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள போஸ்டரில் ஆம் ஆத்மியின் ஊழல் திருடர்கள் சத்தத்தை உருவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்”.
இந்நிலையில் இந்த போஸ்டர் தற்போது டெல்லி வட்டாரத்தில் அதிக பேசுபொருளாக இருப்பதனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதட்டத்தில் இருப்பதாகவும், இதுபோன்ற போஸ்டர்களினால் அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு இது பின்னடைவையே ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.