தீவிர பாஜக எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை எதிர்த்து தேர்தலில் களம் கண்டு டெபாசிட் கிடைக்காமல் படு தோல்வியை சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜின் சொந்த மாநிலமான கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது, இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று தினமும் ஒரு கருத்தை தெரிவித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.
அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய போவதாகவும், பாஜகவிற்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானது, இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது, இந்த சூழலில் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல, முந்தி கொண்ட பிரகாஷ் ராஜ், கிச்சா சுதீப் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட மாட்டார்.
அது எனக்கு நன்றாக தெரியும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என ட்விட்டரில் தெரிவித்தார்.இதை பார்த்த பலர் ஏன் நீங்கள் நேரடியாக பாஜகவை எதிர்காலம் ஒருவர் பாஜகவை ஆதரிக்க கூடாதா? இந்தியா முழுமைக்கும் ஆட்சியில் இருக்கும் கட்சி பாஜக, இன்னும் சொல்ல போனால் எந்த நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தொல்லை கொடுக்காத கட்சி பாஜக.
தமிழ்நாடு சென்று திரை துறையினரிடம் விசாரணை செய்து பாருங்கள்.., ஒரு திரைப்படத்தை ஆளும் கட்சியின் வாரிசு ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது, அவர்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் புது படம் வெளிவந்தால் வேறு நடிகர்கள் படம் 10 நாளைக்கு வெளிவர நினைத்தும் பார்க்க கூடாது.
ஆனால் இது எங்காவது பாஜக ஆளும் மாநிலங்களில் இருக்கிறதா உண்மையில் நல்லவர் என்றால் பாஜகவிற்கு ஆதரவாக கிச்சா சுதீப் களத்திற்கு வருவார் என ட்விட்டரில் தெரிவித்தனர். இந்த சூழலில் பிரகாஷ் ராஜ் முகத்தில் கரியை பூசுவது போன்று, நல்ல நோக்கங்களை கொண்டிருக்கும் பாஜகவிற்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கிச்சா சுதீப் அறிவித்து இருக்கிறார்.
இது யாருக்கு அதிர்ச்சியை கொடுத்ததோ இல்லையோ, பிரகாஷ் ராஜிற்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது குறிப்பாக சுதீப் பேட்டியை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார், பிரகாஷ் ராஜின் இந்த கருத்தை பார்த்த பலர் கண்ணீர் மட்டும் தான் மிச்சம் இப்படி மொத்தமாக கதற தொடங்கி இருக்கிறார் பிரகாஷ் ராஜ் என விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி ஒன்றில், எனது அரசியல் நடவடிக்கைகளால் எனது பணி பாதிக்கப்படுகிறது என கூறிய அவர், அதற்காக பாஜகவை விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டேன் என்றும் வேண்டுமென்றால் நான் எனது சினிமா பணியை விட்டு ஒதுங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு வசதியும், வலிமையும் எனக்கு இருக்கிறது என்றும் ஆணவமாக பேசியது குறிப்பிடத்தக்கது.