24 special

திருமாவுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தையா?அப்போ திமுகவின் கதி..!

Thirumavalan ,edappadi
Thirumavalan ,edappadi

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை அதிமுகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்.


அதிமுக-பாஜக கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே பல்வேறு கருத்து மோதல்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. அந்தவகையில் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக இனிவரும் காலங்களில் தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் நம்முடைய கட்சியின் பலம் என்ன என்பது நமக்கு தெரியும். 

அதிமுக போன்ற திராவிட கட்சிகளுடன், பாஜக கூட்டணி வைத்தால் நான் மாநிலத் தலைவர் பதிவியில் இருந்து ராஜினாமா செய்வேன் என தனது நிலைப்பாட்டை  அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று மட்டும் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஆனால் இனிவரும் காலங்களில் அதிமுக கூட்டணி என்பது தொடரும் என்று அவர் ஒரு இடத்தில் கூட தெரிவிக்கவில்லை என்றார்.

இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் பதிலளித்தார். அதில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்கும் உரிமை பாஜக தேசிய தலைவர்களுக்கு மட்டுமே உள்ளது. அதிமுக கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுக்க முடியாது என்றார். இப்படியே அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மோதிக்கொள்வதனால் கூட்டணியில் விரிசல் அதிகமாக காணப்படுகிறது. 

அதேபோல் திமுகவும், பாமகவும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுகவுடன் பாமக கூட்டணி வைத்தால், திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி கண்டிப்பாக விலகும் என்று தெரிவித்திருந்தார். 

இரு கட்சிகளிலும் கூட்டணி பிரச்சனைகள் உள்ளதால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை துரத்திவிட்டு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருகிறாராம். 

மேலும் அதிமுக கட்சி என்பது ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே ஆன கட்சி என்ற நிலைப்பாடு தற்போது தமிழகத்தில் இருப்பதினால், தலித் மற்றும் சிறுபாண்மையினரின் வாக்குகளை பெறவும், நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டப்பேரவை தேர்தலிலும் திருமாவளவனுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதாலும், அதிமுக கட்சிக்கு பெரிய வாக்கு வங்கியை ஏற்படுத்தும் என்ற காரணத்தாலும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் மறைமுக பேச்சு வார்த்தையை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.