
இன்றைய காலகட்டத்தில் அனைத்தையும் விட பணம் ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. பணம் இருந்தால் பத்தும் செய்யும் என்ற அடைமொழிக்கேற்ப எல்லாரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அது அவர்களுடைய தவறு என்று முற்றிலும் கூற முடியாது என்றாலும் சிலர் தனது ஆசையை பெருக்கிக் கொண்டு பணத்தின் மீதான மோகத்தையும் வளர்த்துக் கொண்டே வருகின்றனர். ஒரு சிலரோ தன் குடும்பத்தை வழிநடத்துவதற்கும் குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் திருமண செலவுக்கும் தன் எதிர்காலத்திற்கும் குறிப்பிட்ட அளவு தொகையை தன் உழைப்பால் சேமித்து வருகின்றனர் ஆனால் மற்ற சிலரோ எந்த ஒரு உழைப்பும் போடாமல் எளிதில் கஷ்டப்படாமல் பணம் நம்மை வந்து சேர வேண்டும் என திருட்டு கொலை கடத்தல் வழிப்பறி என பல குறுக்கு வழிகளை கையாளுகின்றனர்.அதுமட்டுமின்றி நவீன உலகத்தில் திருட்டும் நவீனமாகி வருகிறது ஏனென்றால் இன்றைய மக்கள் தங்களது கையில் ரொக்கமாக பணத்தை வைத்திருப்பதை விட டிஜிட்டல் உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட பல விஞ்ஞான திருடர்கள் விஞ்ஞானத்தின் மூலம் எப்படி தேடுவது என்பதையும் கற்றுக் கொண்டு அதன் மூலமாகவும் பலரின் வங்கி கணக்குகளை முடக்கி திருட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
இப்படி ஒவ்வொரு விதமான திருட்டுகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் புது விதமாக ஒரு திருட்டை இவ்வளவு நாளாக ஒரு வாலிபர் அரங்கேற்று வந்துள்ள செய்தி தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் அந்த திருட்டு குறித்து பிரபல தமிழ் திரை உலகின் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் கூறியிருக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு பத்து பதினைந்து கிலோ மீட்டரில் பத்ரகாளியம்மன் கோவில் என்ற ஒரு பிரபலமான கோவில் இருக்கும், அந்த கோவில் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் நாங்கள் படப்பிடிப்பு எடுக்கும் இடங்கள்! அந்தப் பகுதியில் அம்பராம்பாளையம் ஆறு என்று நீலகிரி மேலிருந்து வரக்கூடிய ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆத்தோரத்தில் பல வாலிபர்கள் சுற்றுலா வருபவர்கள் படப்பிடிப்பிற்கு வருபவர்கள் கோவிலுக்கு வருபவர்கள் என அனைவரும் அந்த ஆற்றில் இறங்கி நீச்சல் அடிப்பார்கள், அப்படி நீச்சல் அடிக்கும் பொழுது திடீரென்று சிலர் காணாமல் போய்விடுவார்கள் பிறகு பார்த்தால் இப்பகுதியில் சூழலில் சிக்கி தண்ணீர் உள்ளே இழுத்துக் கொண்டு சென்று பாறைக்கு நடுவே சிக்க வைத்து மரணத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறுவார்கள்.
அப்படி சுழல் சிக்கி அந்த ஆற்றில் இறந்தவர்களை மீட்க உள்நீச்சல் அடிக்கும் வாலிபர் ஒருவர் வந்து அந்த உடலை மீட்டுக் கொடுப்பாராம் ஆனால் அப்படி மீட்கப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வாராம் அந்த தொகையானது ஆளுக்கு ஏற்றார் போல் மாறும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தொகை நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்த ஆற்றில் அங்கு இங்கு தேடி பிறகு உடலை மீட்டுக் கொடுப்பார் அந்த வாலிபன் ஆனால் பிறகுதான் எங்களுக்கு தெரியும் இந்த வாலிபனை உள் நீச்சலில் அதிக நேரம் மூச்சுப்பிடித்து நீச்சல் அடிக்கும் திறமையை பயன்படுத்தி அப்பகுதியில் தனித்து விடப்படுபவர்களை கவனித்து யாரும் பார்த்திராத சமயத்தில் அவர்களின் காலை இழுத்து பிடித்து தண்ணீருக்குள் மூழ்கடிக்க வைத்து பாறைக்குள் சிக்க வைத்து மரணத்தை ஏற்படுத்தி விடுகிறானாம்! எப்படி என்று பாருங்கள் ஒருவருக்கு மனதரத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு இறந்த உடலை எடுத்து தருவது போன்று இவன் ஒரு தொகையை நிர்ணயித்து இப்படி ஒரு திருட்டில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறான். முன்பு இது அதிகமாக நடக்கப்பட்டது ஆனால் தற்பொழுது ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது இருப்பினும் இந்த பகுதிக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என கூறிக் கொள்கிறேன் என்று பாக்கியராஜ் கூறியிருந்தார். இதற்கு பல நெட்டிசன்களும் ஆம் இது உண்மைதான்! இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்ற பதிவுகளை இணையத்தில் பதிவிடுகின்றனர்.