
சினிமாவில் வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அந்த படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் திறனை வளர்த்து கொடுள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் நகைச்சுவை நடிகர் சூரிக்கும் இடையே சமீபமாக பிரச்சனை தொடங்கியதாகவும் அதனால் இருவரும் இணைந்து படம் நடிக்க மாட்டர்கள் என சினிமாவில் பேசப்பட்டது. அதனை தற்போது நடிகர் விஷ்ணு விஷால் உறுதி செய்யும் விதமாக மனம் திறந்து பேசியுள்ளார்.
விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான படம் வெண்ணிலா கபடி குழு. அந்த படத்தில் தான் நகைச்சுவை நடிகராக சூரியும் அறிமுகமானார். அதிலும் அந்த படத்தில் பரோட்டா காமெடி மூலம் மக்கள் இடத்தில் அறிமுகமானார் சூரி பல படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தார். வெண்ணிலா கபடி குழு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சூரி, அடுத்தடுத்து பல படங்களில் காமெடியனாக நடித்தார். அங்கிருந்து தொடங்கிய பயணம் தான் தற்போது விடுதலை படத்தின் ஹீரோ வரை கொண்டு சென்றுள்ளது. விஷ்ணு விஷாலுடன் சூரி நடித்த வந்த படங்கள் எல்லாம் வெற்றி படமாக அமைந்தது.
இதற்கிடையில் இவர்களது நட்பில் பிளவு ஏற்பட்டது. விஷ்ணு விஷாலால் தனா இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது சினிமா வட்டாரத்தில். முன்னாள் டிஜிபியான விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷ், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சூரி புகார் கொடுத்தார். சூரியின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி காவல் துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். விஷ்ணு விஷால் தனி ட்ராக்கில் நடித்து வந்தார். கடந்த வாரம் வெளியான லால் சலாம் படத்தின் வெற்றிக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அதில், "சமீபத்தில் நானும் நண்பர் சூரியும் சந்தித்து பிரச்சினை பற்றி பேசி சரி செய்துகொண்டோம். இந்தப் பிரச்சினை பெரிதான போதே எங்கள் இருவரையும் நேரில் சந்தித்து பேசும்படி எனக்கு நெருக்கமானவர்கள் கூறினர். ஆனால் அப்போது இருந்த விரக்தியில் அது எதுவும் முடியாமல் போய்விட்டது. பின்னர் நெருங்கி பேசும் போது தான் எனக்கும் சூரிக்கும் சில விஷயங்கள் புரிந்தன." "மூன்றாவதாக வந்த ஒருவர் தான் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அவர் தான் எங்களுக்கு இடையே புகுந்து விளையாடியுள்ளார். நட்புக்குள் மூன்றாவதாக ஒரு நபரை தலையிடக் கூடாது என்ற வாழ்க்கைப் பாடத்தை இதிலிருந்து தான் கற்றுக்கொண்டேன். விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதேபோல் மீண்டும் நானும் சூரியும் இணைந்து நடிப்போம்" என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
படம் வெற்றிபெறுவதற்காக எதையும் பேச வேண்டாம் என்றும் உங்களுக்குள் பிரச்சனை தொடர்ந்து வருவதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். விஷ்ணு விஷாலின் பேச்சுக்கு சூரி தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கம் வெளியாகவில்லை. எங்கள் நட்புக்குள் இருந்தது அந்த ஒரு நபர் என்று விஷ்ணு விஷால் குறிப்பிடுவது சினிமாவில் உள்ள நபர்தான் அதனால் தான் அவரின் பெயரை சொல்ல தயங்குகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சூரி என்ன கருத்து தெரிவிக்க போகிறார் பிரச்சனை தீர்ந்தால் சரி தான் என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் விஷ்ணு விஷால் ரசிகர்கள்.