
பல போராட்டங்களுக்குப் பிறகு மத கலவரங்களுக்கு பிறகு அயோத்திகள் ராமருக்கான கோவில் கட்டப்பட்டு மக்களின் வழிபாட்டிற்கு வந்துள்ளது இதனை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடித்த பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களின் ஆதரவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இடதுசாரிகள், திமுக அரசு மற்றும் சில பத்திரிகையாளர்கள் இதனை கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வேண்டுமென்றே அரசியலில் பேசு பொருளாக மாற்றி வந்தனர். இந்த நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் நேர்காணலில் தமிழறிவு மணியனிடம் அயோத்தி ராமர் கோவில் குறித்து விதண்டாவிதமாக பேச சரியான பதிலடியை கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அதில், ராமர் கோவில் கட்டியதில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களை மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள், என்று அவர் கூறியதும் எப்படி என்று பேட்டி எடுப்பவர் கேட்கும் பொழுது நானே சொல்கிறேன் எனக்கு கூற ஆரம்பித்தார், தற்போது பொருளாதார சார்ந்த வாழ்வாக மாறி உள்ளது!ராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு இருந்த அயோத்தினுடைய நிலை வேறு, கோவில் கட்டப்பட்ட பிறகு இருக்கிற அயோத்தியின் நிலை வேறு! அங்கு மிகப் பெரிய அளவிலான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பேட்டி எடுப்பவர் சார் நம்ம கண்ணு முன்னாடி இருக்கிற மசூதி இடிக்கப்பட்டு கோவில் கட்டப்பட்டது அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை கொடுக்கும்? என்று கேட்கிறார் தமிழறிவு மணியன்.இதை பிரச்சினையாக்குகிற போது தான் பிரச்சனையாக மாறுகிறது, நீங்கள் வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று அவர் கூறியதற்கும் பேட்டியாளர் குறிக்கிட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தானே அங்கு கோவில் கட்டப்பட்டது ஆனால் நீங்கள் மறுபடியும் அதே இடத்திற்கு போய் நின்றால் இதன் பின்னணியில் உங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று தானே அர்த்தம்! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதன் அடிப்படையில் இருந்தது? அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் அதற்கு கீழே இந்து கோவில் இருந்திருக்கிறது அந்த கோவில் இருந்த இடத்தில் தான் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது முடிவானது அதுவும் இந்த ஆய்வை செய்தவர் இஸ்லாமிய பெருமகன் ஒருவர்! என தமிழ் அறிவு மணி கூறிக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்து இன்று அங்கு கிடைத்திருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து கூறியிருக்கிறார்கள் ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பாக இதுபோன்று நடக்கவில்லையே! என கேட்டார்.
இந்தியா முழுவதும் எத்தனையோ கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டிருக்கிறது என்று தமிழறிவு கூறியதற்கும் எப்பொழுது சார் நம் காலத்திலா இல்லை என மணி கூரியதற்கும் 47க்கு முன்பா சார் என்று மீண்டும் மீண்டும் பத்திரிக்கையாளர் குறிக்கிட தமிழறிவு மணி இப்படியெல்லாம் பேசினீர்கள் என்றால் எனக்கு நேர்காணல் தேவையில்லை இந்த நேர்காணலால் எனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை! என்னிடம் வந்து உட்கார்வதாக இருந்தால் திறந்த மனதோடு அமர வேண்டும் அப்பொழுது தான் நான் பேசுவேன் ஏனென்றால் இஸ்லாமிய கிறிஸ்தவர்களை என்னைவிட உங்களால் நேசித்திட முடியாது, என் வாழ்நாள் முழுவதுமே நான் காந்தியத்தை கற்றவன் காந்தியத்தின்படி இன்று வரை வாழ்கிறவன் காமராஜர் படி ஒரு சொத்துக்களையும் சேர்க்காமல் எளிமையாக வாழ்ந்து வருகிறேன் எனக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது ஆனால் இப்படி உங்களைப் போன்ற மனிதர்கள் திட்டமிட்டு இந்த சிறுபான்மையினரின் மக்களின் உணர்வுகளை தூண்டி தூண்டி ஒரு வெறுப்பு அரசியலை விதைக்கின்றீர்கள்! என்பதுதான் என்னுடைய வருத்தம்! நான் பாரதிய ஜனதா கட்சி பக்கமே போகவில்லை, பாஜகவை எதிர்ப்பதற்கு வேறு எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் உங்கள் கையில் இருக்கும் ஒரே துருப்பிடித்த ஆயுதம் இந்த சிறுபான்மையினர் மக்களுக்கு எதிரானவர்கள் அவர்கள் என்பது மட்டுமே! அயோத்தியில் ஒரு கோவில் கட்டப்பட்டிருப்பதில் உங்களுக்கு என்ன என்று நான் கேட்கிறேன்! அந்த கோவிலை கட்டுவதினால் இந்தியாவில் இருக்கின்ற எந்த முஸ்லிமுக்கு என்ன குறைபாடு வந்துவிட்டது? என்ன பிரச்சனை விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் அங்கு கோவிலை கட்டுகிறார்கள் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்ட பொழுதும் இப்பொழுதும் ஏதேனும் ஒரு கலவரம் வந்திருக்குமா ஆக அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் துணை நின்று ஏற்றுக் கொண்டார்கள் என்று தானே அர்த்தம்! ஆனால் இங்கு இருக்கக்கூடிய உதயநிதி தான் திருவாய் மலர்கிறார் கோவில் கட்டுவ…