பிரதமர் மோடி இன்று மாலை திண்டுக்கல் வருகை தர இருக்கிறார், பிரதமர் வருகையை ஒட்டி திண்டுக்கல் மாவட்டமே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வர பட்டுள்ளது இது ஒரு புறம் என்றால் திண்டுக்கல் மாவட்டத்தை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்துவது யார் என திமுக பாஜக இடையே மிக பெரிய போட்டிகள் அரங்கேரி வருகின்றன.
பிரதமர் வருகைக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல்லில் பாஜகவினர் குவிந்து வருகின்றனர், இந்த சூழலில் பிரதமர் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இதையடுத்து திமுக மற்றும் பாஜகவினர் இடையே யார் மிக பெரிய அளவில் தங்கள் தலைவர்களுக்கு வரவேற்பு அளிப்பது என்பதில் பலத்த போட்டி நிலவியது.
ஒரு கட்டத்தில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவினரை காட்டிலும் அதிக அளவில் பாஜகவினர் தங்கள் கொடியை பறக்கவிட மிக பெரிய அதிர்ச்சியை திமுகவினர் சந்தித்திருக்கிறார்கள்.
நாளை முதல்வர் வேறு வருகிறார் திமுக கொடியை காட்டிலும் பாஜக கூடிய அதிகம் பறந்தால் என்ன நினைப்பார் என திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய புள்ளி நினைக்க காவல்துறை மூலம் பாஜக கொடிகளை அகற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வேகமாக பாஜக கொடிகளை அகற்ற இருதரப்பு இடையே சலசலப்பு உண்டானது.
இது அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திண்டுக்கல் நோக்கி பாஜகவினர் படையெடுக்க ஒரு வழியாக போலீசார் பாஜக கொடியை நடவும் விளம்பரங்கள் செய்யவும் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவினர் இத்தனை பேர் பேர் இவ்வளவு பிரமாண்டாக வரவேற்பு அளிப்பார்கள் என திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆளுங்கட்சி செய்து திமுகவின் நினைக்கவே இல்லையாம்.
திண்டுக்கல்லில் பல பகுதிகளில் இப்போது காவி பாஜக கொடி தான் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக பறக்கிறதாம், இது வெறும் சாம்பிள் தான் இதே போன்று தமிழக கோட்டையிலும் பாஜக கொடி பறக்கும் என அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உற்சாகமாக கூறி வருகின்றனர்.