Cinema

நடிகர் விஜய்யை போட்டு தாக்கிய ராஜேஸ்வரி ப்ரியா?

Rajeshwari priya ,actor vijay
Rajeshwari priya ,actor vijay

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரக்கூடிய திரைப்படம் வாரிசு இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியான நிலையில் இணையத்தில் வைரலாகியது வழக்கமான விஜய் படங்கள் என்றாலே சர்ச்சையும் சேர்ந்து உருவாகிவிடும் அந்த வகையில் விஜயின் ரஞ்சிதமே பாடல் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.


இந்த சூழலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விஜயை விமர்சனம் செய்துள்ளார், இது குறித்து மிகவும் ஆவேசமாக கருத்து தெரிவித்த ராஜேஸ்வரி ப்ரியா? 

மீண்டும் மீண்டும் சினிமா பாடல் பற்றி பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறேன் காரணம் இளைஞர்களும் மாணவர்களும் அதிகம் பின்தொடரும் காரணத்தினால்தான். விஜய் அவர்கள் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் சமீபத்தில் வெளியானது ,அதனில்

“உச்சிகொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே “ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்படி எல்லாம் பாடல் எழுதினால்தான் சினிமாவில் வாய்ப்பா? இப்படி பாடல் எழுதி பணம் ஈட்ட வேண்டுமா?காதல் வரிகளா அல்லது காமத்தை தூண்டும் வரிகளா?பெண்களை காமப் பொருளாக இன்னும் எத்தனை காலம்தான் பார்ப்பீர்கள்?

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவர்கள் எல்லாவற்றையும் கவனத்தில்கொண்டே நடிக்க வேண்டும். சிறுவர்கள் அதிகமானோர்  தங்களது ரசிகர்கள் என்று தெரியாதா உங்களுக்கு?

 “உச்சகட்டம்”என்றால் என்னவென்று அம்மாவிடம் 7 வயது சிறுவனும் அப்பாவிடம் 8 வயது சிறுமியும் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் தாய் தகப்பன். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இழிப் பிறவிகளா நீங்கள்?

சிறுவர்கள் வாயால் இந்த பாடலை பாடும்போது பெற்றோர்களது மன நிலை எப்படி இருக்கும் என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா?

சமூக பொறுப்பு கொஞ்சமாவது வேண்டாமா? மக்களால் பணம் ஈட்டுபவர்கள் மக்கள் நலன் பற்றி சிந்திக்க வேண்டாமா?பெண்களை இழிவுபடுத்தி சிறுவர்களை கூட பெண்ணை போகப் பொருளாக  நினைக்கவைக்கும் உங்கள் மனநிலையை மாற்றுங்கள்.

இதுவும் ஒருவகை பாலியல் குற்றம்தான்.தணிக்கை குழு எப்படி இதனை அனுமதித்தது?இந்த வரிகளை நீக்க வேண்டுமென்று நான் திரைப்பட குழுவிற்கு கோரிக்கை வைக்கிறேன்.என மிகவும் ஆவேசமாக விஜயின் பாடல் வரிகளை விமர்சனம் செய்து விஜயை திட்டி தீர்த்துள்ளார் ராஜேஸ்வரி ப்ரியா.