தென் மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நேற்று வருகை தந்த நிலையில் அது ஒட்டு மொத்த தமிழகத்திலும் எதிரொலித்தது, ஆளுநர் தொடங்கி, முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் என அனைவரும் பிரதமரை வரவேற்க திண்டுக்கல் நோக்கி வந்து இருந்தனர் .
பாஜக நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் குவிந்து இருந்தனர் இங்குதான் மற்றொரு அரசியல் மாற்றங்களும் அரங்கேரி இருக்கின்றன, எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை தனியே சந்திக்க நேரம் கேட்ட நிலையில் அதற்கு பிரதமர் மறுத்து விட்டார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இருவரையும் அருகே நிற்கவைத்து மலர் கொத்துக்களை பெற்று கொண்டார். எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்கள் பலருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்காத நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மாநிலங்களவை உறுப்பினர் தர்மருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.
இவை அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து பார்த்தால் நிச்சயம் பாஜக அதிமுகவில் பிரிவுகள் இருப்பதை விரும்பவில்லை எனவும் இதைத்தான் பிரதமர் மோடியும் எதிர்பார்பதாக தெரிகிறது. பிரதமரிடம் தனியே பேச எடப்பாடி தரப்பு நேரம் கேட்ட நிலையில் ஒன்றாக வந்தால் மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என பிரதமர் வட்டாரம் ஒற்றை வார்த்தையில் தெரிவித்து இருக்கிறதாம்.
பிரதமரின் நேற்றைய சமீக்கை, ஏற்கனவே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை அங்கிகரிக்காமல் இருப்பது, அதிமுகவிற்கு சொந்தமான தேவர் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பால் பெற முடியாமல் போனது, அதிமுக எம்.பி என ரவீந்திரநாத் குமாரை அழைக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் நிராகரிக்க பட்டது என அடுத்தடுத்து கடும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது எடப்பாடி தரப்பு.
மேலும் போதாத குறைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேச தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் பாமக அதிருப்தி அடைய தொடங்கி இருக்கிறதாம்.
மொத்தத்தில் பிரதமரின் நேற்றைய வருகை எடப்பாடி பழனிசாமி தரப்பு இனியும் முரண்டு பிடித்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு என்ன நடந்ததோ அதே நிலைமை தமிழகத்தில் அதிமுகவிற்கும் அரங்கேரும் என்ற ஒன்று மட்டும் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறதாம்.
மீண்டும் ஓபிஎஸ் உடன் ஒன்று இணைந்தால் இனி எப்போதும் கட்சியை தனியே கைப்பற்ற முடியாது போதாத குறைக்கு ஓபிஎஸ் பக்கம் ஆதரவாளர்களை வேறு திரட்ட வாய்ப்புகளை உண்டாக்கி விட்டோம், ஒன்று சேரவில்லை என்றால் பாஜக எதிர்ப்பை சந்திக்க நேரிடும் இதனால் என்ன செய்வது என தெரியாமல் கடும் கலக்கத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.