24 special

தொடர் கெட்ட செய்திகள்...!புலம்பலில் பெரிய தலைகள்...!

Mk stalin, kalaignar
Mk stalin, kalaignar

திமுக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அதுவும் ஒரு வருட காலத்திற்கு கொண்டாட திமுக தலைமை ஏற்பாடு செய்திருந்தது. அதாவது இந்த கொண்டாட்டம் 2023 ஜூன் மூன்றாம் தேதி தொடங்கி 2024 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வரை கொண்டாடுவதற்காக பல விழாக்களையும் ஏற்பாடுகளையும் செய்திருந்தது.


மேலும் இந்த ஒரு வருட கொண்டாட்டத்தில் மாவட்டந்தோறும் கலைஞரின் சிலையை திறக்கவும், பழைய கொடி கம்பங்களை புதுப்பித்து புதிய கொடிகளை ஏற்றுவதற்கும், கழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முன்னோடிகளை நேரில் சந்தித்து மரியாதை செய்யவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக போட்டிகளை நடத்தி திமுகவின் குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்க கட்சி அறிவுறுத்தியதாகவும் பல செய்திகள் வெளியானது. மேலும் என்றென்றும் கலைஞர் என்றும் தரப்பில் பல கருத்தரங்கு பொதுக் கூட்டங்களை நடத்தவும் டிஜிட்டல் நூலகங்களை திறக்கவும் கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டதாக கூறப்பட்டது. 

இப்படி ஆரவாரத்துடன் ஜூன் மூன்றாம் தேதி நடைபெற இருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தேதி மாற்றப்பட்டு ஜூன் ஏழாம் தேதி நடைபெற்றது இதில் முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர்கள் பங்கேற்றிக்கொண்டனர். சரி ஆரம்பம் தான் தாமதம் ஆகிவிட்டது இனி பட்டையை கிளப்பி விடுவோம் என்று நினைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மாணவர்கள் பெண்கள் அரசு ஊழியர்கள் பயனடைந்த மக்கள் என அனைவரிடமும் திமுக செய்த சாதனைகளை கொண்டு செல்வதற்கான கருத்தரங்குகளையும் பொதுக் கூட்டங்களையும் வெகு விமரிசையாக நடத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தது திமுக. அதோடு அதிமுக கொண்டாடிய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை போல் இல்லாமல் கலைஞரின் நூற்றாண்டு விழா மக்கள் மத்தியில் ஒரு வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அந்த வகையில் ஒரு வருட காலத்திற்கு வெகு விமர்சியாக கொண்டாட வேண்டும் என்று முதல்வரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் அது அனைத்தும் நடைபெறாமல் ஏமாற்றத்தை அளித்துள்ளதால் முதல்வர் தற்போது பெரும் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது, குறிப்பாக முதல்வர் குடும்பத்தினர் இதனால் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன! கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் சில தடங்கல்கள் மற்றும் குறைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதாவது நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை வைத்து திறக்கலாம் என்று ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அது கைகூடாமல் இறுதியில் அவரே திறக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்ததாக திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை அழைத்துள்ளனர். ஆனால் அதுவும் கைகூடாமல் அவர் விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் தனது சகோதரி செல்வியை வைத்து அந்த கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். 

ஆரம்பத்தில் ஜூன் மூன்றாம் தேதி நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஏழாம் தேதிக்கு மாற்றப்பட்டது அதனை அடுத்து எல்லாம் சரியாக நடைபெறும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் தொடர்ந்து இரண்டு நிகழ்விலும் பெருமித்த ஏமாற்றமே நமக்கு கிடைத்தது இந்த நிலையில் மதுரை கலைஞர் நூலக நூற்றாண்டு திறப்பு விழாவில் எந்த ஒரு தடங்கலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் அமலாக்கத்துறை வேறு செந்தில் பாலாஜியின் வழக்கை தோண்டி துருவி எடுத்து தற்போது செந்தில் பாலாஜியை கிட்டத்தட்ட தனது வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டது, அது வேறு கலைஞர் நூற்றாண்டு விழா சமயத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மாபெரும் தலைவலியை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால் கலைஞர் நூற்றாண்டு விழா சொதப்பியது ஒரு பக்கம்! அமலாக்க துறையின் வசம் திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி இருப்பது மறுபக்கம்! இப்படி இருப்பதால் முதல்வருக்கு சந்தோஷ மனநிலையே இல்லை என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.