24 special

இளம் பெண்ணின் பேச்சு...!அண்ணாமலைக்கு லண்டனில் கிடைத்த பெருமை....!

Annamalai
Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நோக்கி லண்டனில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் எழுப்பிய கேள்வி தற்போது இணையத்தில் வட்டமடிக்க தொடங்கி இருக்கிறது.பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட ஷிவானி லண்டனில் வசிக்கிறார்.. இவர் தினசரி அண்ணாமலை பற்றி ஆங்கிலத்தில் வரும் செய்தியை பார்த்து அண்ணாமலையின் ரசிகராகவே மாறி விட்டாராம்.


வைரலாகும் வீடியோவில் அண்ணாமலையிடம் தமிழில் பேச வேண்டும் என்பதற்காக நண்பர் வழியாக தமிழில் அறிந்து கொண்ட வாக்கியத்தை பேசுகிறார் ஷிவானி.உங்கள் உரையை கேட்கின்றேன் நான் உங்கள் ஆதரவாளர்,உங்கள் மக்கள் சேவைக்கு நன்றி" என்று சொல்கிறார்..பஞ்சாப்பை சேர்ந்த ஷிவாணி.

அவர் பஞ்சாபை சேர்ந்தவர் என்பதால் சற்றும் யோசிக்காமல்,"சத் ஸ்ரீ அகால்!" என்று மறுமொழியாக பஞ்சாபியில் நன்றி கூறுகிறார் அண்ணாமலை.. பொதுவாக தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கும் கிடைக்காத வரவேற்பு தற்போது அண்ணாமலைக்கு வெளிநாடுகளிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியிலும் கிடைத்து இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.