பாஜக சார்பில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள லண்டன் சென்ற அண்ணாமலை நேற்று சென்னை வந்து அடைந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்த அண்ணாமலை நிருபர் எழுப்பிய ஒரு கேள்விக்கு கடுமையாக ஆவேசம் அடைந்தார்.இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தனியார் ஊடகத்தை சேர்ந்த நிருபர் நீங்கள் லண்டனில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கை லண்டனில் சந்தித்ததாக தகவல் வருகிறது என அண்ணாமலையிடம் கேட்க.
அண்ணாமலை கடுமையாக அந்த கேள்வியை எதிர்த்தார், யார் உங்களுக்கு கூறினார் கூறுங்கள், நான் சந்தித்ததாக தகவல் கூறியவர்கள் யார்? சும்மா எதையாவது கேட்க கூடாது நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆதாரம் வேண்டும் நான் கூட நீங்க திமுகவினரிடம் 1000 ரூபாய் வாங்கி கொண்டு கேள்வி கேட்கிறீர்கள் என சொன்னால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா? பதில் சொல்லுங்கள் நிருபர் மாதிரி நடந்து கொள்ளுங்கள் என அண்ணாமலை அரசீற்றதுடன் பேசினார்.
இது இணையத்தில் நேற்று இரவு முதல் வைரலாகி வருகிறது, அண்ணாமலை விமான நிலையம் வந்து இறங்கியதும் ஆவேசம் அடைய இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளனவாம், லண்டன் பயணம் சென்ற அண்ணாமலையின் நோக்கமே இந்திய பிரதமர் மோடி நம் தமிழ் மக்களுக்கு இலங்கை தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழ் மக்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் செய்த உதவிகளை விவரமாக எடுத்து கூறி இந்தியா மற்றும் இலங்கை தமிழர்கள் உறவை வழுப்படுத்த லண்டன் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
இது காலம் காலமாக இலங்கை தமிழர்களை வைத்து மத்தியில் ஆட்சி செய்யும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை தமிழர்களை திசை திருப்பும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.மேலும் இலங்கை தமிழர்கள் முன்னிலையில் அண்ணாமலை 2009-ம் ஆண்டு நடந்தது மாபெரும் தவறு மத்தியில் பாஜக ஆட்சி இருந்து இருந்தால் பிரதமர் மோடி இலங்கை தமிழர்களை கைவிட்டு இருக்க மாட்டார் எனவும் அடித்து கூறி வருகிறார்.
இதனால் தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் மீது நலன் கொண்ட இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை பாஜக காங்கிரஸ் திமுக கூட்டணியை விட 100 மடங்கு நல்ல கட்சி என்ற கருத்தை உண்டாக்கி இருக்கிறது.இதே நிலையில் சென்றால் அண்ணாமலையின் லண்டன் பயணம் மிக பெரிய பேசு பொருளாக மாறும் என கணக்கிட்ட ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் அண்ணாமலை லண்டனில் வைத்து செந்தில் பாலாஜி தம்பியை சந்தித்தார் என சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இது அண்ணாமலையின் கவனத்திற்கு செல்ல தற்போது விமான நிலையம் இறங்கிய கையோடு நிருபர் கேட்ட கேள்விக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்தார். இதன் மூலம் அனைத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்ணாமலை நிருபரிடம் நான் யாரை சந்தித்தேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என கேட்ட கேள்வி சாமானிய மக்களையும் சென்று அடைந்து இருக்கிறது.
இதன் மூலம் அண்ணாமலை லண்டன் சென்றதற்கான உண்மையான நோக்கம் ஆவேச பேட்டி மூலம் ஒரே நாளில் வெளிவந்து இருப்பதுடன் சமூக ஊடகங்களில் ஆளும் கட்சியினர் பரப்பிய தகவலையும் முடிவிற்கு கொண்டு வந்து இருக்கிறது.