24 special

தொடர்ச்சியாக எழுந்த கேள்விகள்!! பொறுக்க முடியாமல் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்த தலைமைச் செயலர்...!! நீங்க பொங்கினாலும் உங்க தலைவர் விடமாட்டாரே..!

MKSTALIN, SHIVDAS MEENA
MKSTALIN, SHIVDAS MEENA

முன்பெல்லாம் பெண்கள் கூட்டமாகவும் தனியாகவும் வெளியே செல்லும் பொழுது காலம் கெட்டுக்களுக்கு பார்த்து சொல்லுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் தற்பொழுது இதனை அரசியல்வாதிகளுக்கும் கூற வேண்டும் போல,,  ஏனென்றால் தற்போது அரசியல்வாதிகள் கூட தன் நண்பருடன் சேர்ந்து நிற்க முடியாத நிலையில் தான் தமிழகம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் மாநிலத்தின் தலைநகரில் மர்ம கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டார். அவரது கொலைக்கு பின்னால் கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கும் தொடர்பு இருப்பதும் செய்திகளில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மற்றும் இந்த மாதத்தில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் 2015 நடந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்து இந்த கொலை சம்பவத்தை ஒரு கும்பல் அரங்கேறி இருக்கிறது என்றால் இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? கடந்த ஆட்சி காலத்தில் அவர்களால் வெளிவர முடியாது பொழுது இந்த ஆட்சி காலத்தில் மட்டும் எப்படி அவர்களால் வெளிவர முடிந்தது! ஆக இவர்களுக்கு பின்னால் நிச்சயம் ஆளும் அரசின் அதிகாரம் இருக்கும் என்றும் அரசியல் விமர்சனங்கள் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை கொடுத்து வருகின்றனர். 


அதுமட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடியாக டிஎஸ்பி மாற்றப்பட்டார் மேலும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர் ஆனால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்து, இந்த கொலை வழக்கில் தமிழக அரசின் சிபிசிஐடி விசாரணை வேண்டாம் சிபிஐ விசாரணை தான் வேண்டுமென்று ஒரே அடியாக அடித்தார். எனவே இதன் மூலமே தெரிகிறது சிபிசிஐடியின் விசாரணை என்பது பத்திரிக்கையாளர்களும் அரசியல் எதிர் கட்சி தலைவர்களும் முன் வைக்கும் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக திமுகவால் காட்டப்படுகின்ற ஒரு போர்வை மட்டும்தான்! இவரின் கொலைக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகி மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் இறந்து கிடந்தார் அந்த விசாரணை தற்போது நீண்டு கொண்டு செல்கிறது.

மேலும் அதிமுக பாமக என தொடர்ச்சியாக அரசியல் கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த கதையில் தற்போது புதிதாக நாம் தமிழர் கட்சியும் இணைந்துள்ளது. இது போதாது என்று அவ்வப்போது கள்ளச்சாராய உயிரிழப்புகளும், கஞ்சா புழக்கமும், போதைப்பொருள் கடத்தலும் நடந்து ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர் குழைந்திருக்கும் மாநிலமாக தற்போது தமிழகம் மாறி உள்ளது. இது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி கொடுக்கிறது அதனால் இந்த விவகாரங்கள் அனைத்தையும் மறைக்கும் விதத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்கிறார்கள் ஆனால் அந்த மாற்றங்களுக்கும் நடந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. அதாவது டிஎஸ்பி மற்றும் காவல் அதிகாரிகளை கொலை சம்பவங்கள் நடந்த பிறகு திமுக அரசு மாற்றியது அந்த வகையில் சமீபத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்துள்ளது.

திமுகவில் இந்த நடவடிக்கையும் போலி தான், நம்மை மறை மாற்றுவதற்காக தான் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட தற்போது அதிரடியாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, என்னதான் அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலர் ஒன்று கூடி தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டாலும் அதில் தமிழகத்தின் முதல்வராக அமர்ந்திருக்கும் ஸ்டாலினை தாண்டி எதுவும் அவர்களால் செய்ய முடியாது. ஏனென்றால் நீங்கள் விவாதிக்கின்ற அனைத்து பிரச்சனைகளிலும் முக்கிய காரணமாகவும் காரண கர்த்தாவாகவும் திமுக கட்சியை நிர்வாகிகளே இருக்கிறார்களே அப்படி இருக்கும்பொழுது எப்படி உங்களை இதில் நடவடிக்கை எடுக்க விடுவார் என இணையத்தில் கமெண்ட்டுகள் எழுந்துள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பிரதானமாக விவாதிக்கப்பட்டது எனவும் சில தகவல்கள் கசிகின்றன...