வார்த்தைக்கு வார்த்தை திமுகவினர் திராவிட மாடல் திராவிட மாடல் என பெருமை பேசி வந்த நிலையில் ஒரே ஒரு மழை ஒட்டுமொத்த திராவிட மாடலையும் வெட்ட வெளிச்சம் ஆக்கி இருக்கிறது.அதிலும் ஐயா நாங்கள் குடைக்குள் மழை படம் பார்த்து இருக்கிறோம் ஆனால் இப்போதான் பஸ்ஸிற்குள் குடை படத்தை பார்த்து இருக்கிறோம் என வேதனையுடன் பயணிகள் பேசிய வார்த்தைகளும் அதை தொடர்ந்து பெண் பயணிகள் கூறிய வார்த்தையும் தான் தமிழக முதல்வர் வரை அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறதாம்.
ற்று இரவு பெய்த கனமழையால் எப்போடா பேருந்து வரும் என காத்து இருந்தனர் பயணிகள்அப்போது அரசு போக்குவரத்து கழக தர்மபுரி -திருப்பத்தூர் வழித்தடத்தில் இயங்கும் Tn 29 N 2561 கொண்ட அரசு பேருந்து வந்து சேர்ந்தது.அப்பாடா பேருந்து வந்தது மழையில் இருந்து தப்பித்தோம் அதோடு வீட்டிற்கும் விரைவாக சென்று விடலாம் என வேகமாக முண்டி அடித்து கொண்டு பயணிகள் பேருந்தில் ஏறினர்.
ஆனால் அங்குதான் பெரிய ஏமாற்றம் கிடைத்தது பஸ்ஷின் மேற் கூரையின் வழியாக மழைநீர் கொட்டியதால் முண்டியடித்து இடத்தை பிடித்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். என்னடா இது மழையில் இருந்து தப்பிக்க பேருந்திற்குள் வந்தால் இங்கு பாத்ரூம் ஸ்வரில் வரும் தண்ணீரை காட்டிலும் அதிக அளவு வருகிறதே என ஒருவரை ஒருவர் பார்த்து ஏமாற்றம் அடைந்தனார்.
பெண்களுக்கு இலவச பேருந்து கொடுத்தோம் கொடுத்தோம் என கூறுகிறார்கள் ஆனால் நிலைமையை பார்த்தீர்களா? இந்த பேருந்தை சரி பண்ண கூட தமிழக அரசால் முடியாதா? மாமன்னன் படம் பார்க்க தமிழக அமைச்சர்களுக்கு நேரம் இருக்கிறது ஆனால் சாமனிய மக்கள் பயணிக்கும் பேருந்தை சரி செய்ய நேரம் இல்லையா என பெண்கள் முதற்கொண்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
பீகார் உத்திர பிரதேச காரர்களை வளர்ச்சியை வைத்து கிண்டல் செய்த காலம் மாறி இப்போது தமிழகத்தை அதிலும் பேருந்திற்குள் மழை நீர் கொட்டிய வீடியோவை பகிர்ந்து வட இந்தியர்கள் கிண்டல் செய்யும் நிலைக்கு தற்போது தமிழக அரசு பேருந்தின் நிலை மாறி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.