24 special

சந்தித்துகொண்ட மு.க சகோதரர்கள் ...!அட இதானா மேட்டரு..!

Mk Stalin,mk alagiri
Mk Stalin,mk alagiri

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் தம்பதிக்கு பிறந்த மூத்த மகன் முக அழகிரி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் இருந்து வந்தார். முக அழகிரி 1980 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையை கவனித்துக் கொள்வதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார் பிறகு மதுரையிலேயே தங்கி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக திமுக வேட்பாளராக மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதற்குப் பிறகு கட்சியின் தலைமைக்கு பிடிக்காத நடவடிக்கைகளில் மு.க அழகிரி ஈடுபட்டதாக கூறி அவர் 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார். 


பிறகு கருணாநிதி மறைந்ததும்  முக ஸ்டாலின் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று தற்போது தமிழக முதல்வராகவும் இருந்து வருகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முக அழகிரி கட்சிப் பணிகளில் பெருமளவு ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார் இருவரும் ஒதுங்கி இருந்தார்கள், இன்னும் கூட போனால் இருவரது குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை  தொடர்பு கூட கிடையாது என தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் பெரும் பகைமை பறைசாற்றி வந்த இந்த இரண்டு குடும்பமும் தற்போது நேரில் சந்தித்துக் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது!

தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு முக அழகிரி வந்ததாகவும் அப்பொழுது மு க ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழியும் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் தனது வழக்கமான உடல் நல சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது முக அழகிரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலினிடம் உடல் நலம் பற்றி விசாரித்ததாகவும் இதற்கு பதிலாக ஸ்டாலினும் தனது அண்ணன் அழகிரியின் உடல் நலம் பற்றி விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. கோபாலபுரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசிக்கொண்ட நிகழ்வை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டு அவர்கள் சந்தித்ததை உறுதிப்படுத்தினார். 

இவ்வளவு வருட காலமாக திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட முக அழகிரியை தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உரையாற்றி இருப்பது சில கட்சியினரிடையே மகிழ்ச்சியையும் சில கட்சியினரிடையே ஆச்சரியத்தையும் எழுப்பியுள்ளது, ஆனால் இவ்விரு குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும் அவர்களின் சந்திப்பை கொண்டாடி வருகிறதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் சீக்கிரத்தில் திமுகவில் முக அழகிரியை பார்க்கலாம் திமுக வின் வேட்பாளராக கூட அழகிரி நிற்கவைக்கப்படலாம் ஏன் அவர் வசித்து வருகின்ற மதுரையில் கூட அவர் நிற்கவைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசியல் விமர்சகர்களிடம் இதன் பின்னணி பற்றி விசாரித்த பொழுது, தென் மண்டலங்களான மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் திமுக மிகவும் வழுவிழந்து வருவதாகவும், திமுக தென்மண்டலத்தில் இழந்த மக்கள் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக தென் மாவட்டங்களில் நமக்காக இறங்கி அரசியல் செய்ய அழகிரியின் துணை தேவைப்படும் அவர் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படும் பின்னடைவை சமாளிப்பதற்காக அழகிரியை சந்தித்து மு க ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது, வரும் தேர்தல்களில் தென் மண்டலங்களை எப்படியாவது திமுகவின் கையில் வைத்துக் கொள்ளவும் நழுவி சென்றுவிடாமல் இருப்பதற்காகவும் திமுக தலைமை பல நாள் யோசித்து போட்ட திட்டமாகவும் இவர்களது சந்திப்பு கருதப்படுகிறது.