தமிழ்நாடு கோயில்கள் இருந்த மாநிலம் ஆகும். தமிழ்நாட்டின் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிக அளவில் கோவில்கள் நிறைந்திருக்கும். நாள்தோறும் பல திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கோவில்களும் தனித்தனி சிறப்புடன், பல வரலாறும் பண்பாடுகளும் நிறைந்த சூழலும் காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வு போன்ற பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி மூலம் பல தொன்மையான தமிழர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மேலும் பல கடவுள்களின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள மக்களின் வாழ்வு நடைமுறைகளும், பண்டைய கால மக்களின் வாழ்வு நடைமுறைகளும் பல மாற்றங்கள் இருந்தாலும் இன்று அவற்றை கண்டெடுக்கும் பொழுது அது மிகவும் வியப்பானதாகவே உள்ளது.
இப்படி எல்லாம் கூட தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்களா!!! என்று ஆச்சரியத்தை நமக்குள் கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான தரவுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கீழடியில் கிடைத்துள்ள பொருள்கள் கி.மு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தப் பொருட்கள் கண்டிருக்கும் பொழுது அதன் மீது பல ஆர்வங்கள் வருகிறது. இங்கு சுடுமண் பானை, இரும்பு உலோகப் பொருள்கள், பாண்டி விளையாட்டு உபகரணங்கள், களிமண் பொம்மை, களிமண் கிண்ணம், கல்லால் செய்யப்பட்ட பந்து, உலோகங்களைச் சாணை பிடிக்கும் கல், பானையில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் போன்றவை கண்டுபிடிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் பண்டைய தமிழர்களின் மேன்மையைப் பேசுகின்றன.
மேலும் இதன் மூலம் பண்டைய கால மக்கள் எந்த மாதிரியான வாழ்க்கை நிலையில் இருந்துள்ளனர் அவர்களின் சுற்றுச்சூழல் எந்த மாதிரி இருந்து இருக்குது அப்படின்னு நம்மளுக்கு தெரிய வருது!!! இதைத் தொடர்ந்து ஒரு பழங்கால முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது!!திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றின் ஓரம் ஒரு சிலை மண்ணுக்குள் புதைந்திருப்பதை அந்த ஊர் மக்கள் பார்த்து உள்ளனர். சிலையானது சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட கருங்காலான கடவுளின் சிலையாகும். பெண் ஊர் மக்கள் பலர் கூடி அதனை பார்க்கும் பொழுது அது முருகன் சிலை என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கருங்கல்லால் ஆன முருகன் சிலையை பார்த்தவுடன் அங்குள்ள மக்கள் அதனை ஆர்வத்துடனும் வியப்பாகவும் பார்த்தனர். எப்படி இந்த ஆறடி சிலை இங்கு கிடைத்தது என்று யாருக்கும் தெரியாமல் அனைவரும் குழம்பி போய் நின்றனர்!! அதோடு அங்குள்ள மக்கள் அந்த சிலையனை தூக்கி வைத்து துடைத்து, நீர் ஊற்றி அந்த சிலையை சுத்தம் செய்தனர்.
அதன்பின் வட்டாட்சியருக்கும் அருங்காட்சியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த சிலையை எந்த காலத்தைச் சார்ந்தது என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த ஆச்சங்கரை ஓரமாகவே கோவில் எழுப்புவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியுள்ளானர். திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை எந்த காலத்தை சேர்ந்த சிலை என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இப்படி திடீரென்று ஒரு முருகன் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் இணையங்களில் வைரலாக மக்களுக்கு கடவுள் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது!!!இந்த சம்பவம் அப்படியே தசாவதாரம் படத்தில் வருவது போல் இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது....