24 special

பாம்பு கடித்தால் விஷம் ஏறாத மலையையும் காகங்கள் இல்லாத மலை மர்மம்...

IYER HILLS
IYER HILLS

அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில் கரூர் மாவட்டத்தில் குளித்தலைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மழையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலில் ஏதேனும் வேண்டுதல்கள் வேண்டிக்கொண்டு ஒரு பூட்டு வாங்கி போட்டி விட்டு அதனுடைய சாவியினை பக்கத்தில் உள்ள குளத்தில் போட்டால் நினைத்தது நடக்கும் என்று கூறுகின்றனர். மேலும் கோவிலில் திருமணம் செய்து கொள்வார்கள் எந்த ஒரு பிரிவினையும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறுகின்றனர். அங்கு அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் விநாயகர், கருப்பண்ணசாமி, வைராக்கியர் மற்றும் தண்டாயுதபாணி சன்னதிகள் உள்ளன. மேலே சென்று வழிபட முடியாத பக்தர்கள் கீழே உள்ள சன்னதியில் வழிபட்டு செல்கின்றனர். இந்த மலையானது ஜோதிலிங்க வடிவில் மிகவும் இயற்கை சூழலில் பார்ப்பதற்கே அழகாக அமைந்திருக்கும். அங்கு அமைந்துள்ள கருப்பசாமி கோவிலுக்கு அருகே வைராக்கிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 


காஞ்சிபுரத்தை சேர்ந்த வைராக்கிய பெருமாள் தனக்கு குழந்தை பிறந்தால் தன் தலையை சிவனுக்கு தருவதாக வேண்டினார். அதுபடியே குழந்தையும் பிறக்க வைராக்கிய பெருமாள் தன் தலையினை சிவனுக்கு படைத்தார். கீழே அமைந்துள்ள வைராக்கிய பெருமாள் கோவிலில் அவருடைய பாதமும், மலை மேல் உள்ள கோவிலில் மயிலாசை பெருமாளின் தலையும் உள்ளது. வைராக்கிய பெருமாளுக்கு தேங்காய் பாலில் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். சிவனுக்கு பூஜை முடிந்த பிறகு அவருடைய மாலை வைராக்கிய பெருமாளுக்கு தான் போடப்படும். படியேறி போகும்போது முதலில் கம்பத்தடியால் கோவில் அமைந்திருக்கும். இந்த கம்பத்து அடியான் கோவிலில் பிள்ளி சூனியம் ஏவல் போன்றவற்றை தடுப்பதற்காக காட்டுக்கட்டும் முறை இங்க பல ஆண்டுகளாக இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகில் சகுன குன்று ஒன்று உள்ளது.  அது ஒரு பெரிய பாறை போன்று இருக்கும். ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கும் போது அங்கு வந்து சகுனம் கேட்கும் பழக்கம் உள்ளது. 

மேலும் இங்கே காலை சூரிய உதயத்திற்கு முன்பு பின் ஆலோசருடைய மறைவிற்கு பின்பும் சகுனம் கேட்பார்கள். இந்த மலையில் பல அதிசயங்களும் உள்ளது!!! இந்த மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷங்கள் எதுவும் இருக்காது என்று கூறுகின்றனர். இந்த மலைக்கு காகம் பரா மலை என்றும் பெயரும் உண்டு. ஏனெனில் ஆயர் ஒருவர் அபிஷேகத்திற்காக கொண்டுவந்த தாளை காகம் ஒன்று தட்டி விட அந்த காகம் எரிந்து விட்டது, அதன்பின் இந்த மலையின் மேலே எந்த காகங்களும் பறப்பதில்லை என்று கூறுகின்றனர். தங்கள் குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் கூட இங்கு அமைந்துள்ள ரத்னகிரிஸ்வரரை தங்கள் குலதெய்வம் என்று வழிபடலாம். இங்கு அமைந்துள்ள இறைவனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும் மேலும் தொழில் விருத்தி மற்றும் புத்திர பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

இங்கு அமைந்துள்ள ரத்தினகிரீஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்!!! நிம்மதி வேண்டி பலர் இன்ப மலைக்கு வந்து வழிபட்டு செல்கின்றன. இம்மலையில் படிகும் வலியை மலையேறும் பொழுது பல வகையான மூலிகைச் செடிகளை பார்க்க முடியும். இத்தகைய மூலிகை காற்றை சுவாசிப்பதன் மூலம் உடலும் உள்ள ஆஸ்துமா, சுவாச  பிரச்சனை, கை கால் மூட்டு வலி உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறி விட்டு வரும் பொழுது அவர்கள் உடலில் மாற்றம் ஏற்படுவதனை உணர முடியும்!! இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வதினால் கொடிய நோய்கள் விரைவில் குணமடைவது கண்கூடாக தெரியும். இது அதிசயமான உண்மை!!! எனவே எங்கு சென்று குணமடையாத ஏதேனும் நோய் உள்ளவர்கள் இந்த மலைக்கு ஒரு முறை வந்து சென்றால் அவர்களின் நோய்  சரியாகும் என்று கூறுகின்றனர்!!