24 special

திடீர் திருப்பம் டெல்லியில் போடபட்ட புது கணக்கு...! இப்போ தெரிகிறதா அமித்ஷா அவசரமாக வந்தது சென்றது ஏன் என...!

amitshah, edappadi , nayanarnagendran
amitshah, edappadi , nayanarnagendran

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் 12 மாதங்கள் கால இடைவெளி உள்ளது. ஆனால், இப்போதே தமிழ்நாட்டில் அரசியல் களம் அதிரத் தொடங்கிவிட்டது. ஆனால் திமுகவோ தமிழ்கத்தில்  பாலாறும், தேனாறும் ஓடுவது போல், மேடை கிடைத்ததும், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி திருமாவளன் ஆகியோர் தற்பெருமை பேசியே நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.ஆனால் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை தினம் தோறும் பட்டியலிட வேண்டும். 


மேலும் தமிழக அரசியலில் திமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அமலாக்கத்துறை, ஒருபக்கம் சி.பி.ஐ  மற்றொரு பக்கம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு  ஊழல் வழக்குகள் என திமுக அரசின் கழுத்தை நெறித்து வருகிறது. இன்னமும் திமுக ஆட்சியில் இருப்பதாலும் கூட்டணி கட்சிகளை தக்கவைத்து இருப்பதால் தான் வண்டியை ஒட்டி வருகிறது. மேலும் எதிர்கட்சிகளை ஒன்றிணையவிடாமல் ஊடகங்களை வைத்து விவாதம் என்ற பெயரில் சண்டையை மூட்டி விடுவதில் தான் கவனம் செலுத்தியதே தவிர மக்கள் பிரச்சனைகளில் காத்து கொடுத்தே கேட்கவில்லை. 

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்  அமித்ஷா அவர்கள் தமிழகம் வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இடம் பெற்றதை அறிவித்தார். இந்த விஷயம் திமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டியுள்ளது.   தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.  தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக பாஜக வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. மேலும் திமுகவை கடுமையாக விமர்சித்த ஒரே தலைவராக அண்ணாமலை அறியப்பட்டார். தொடர் போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் என மிகவும் ஆக்டிவாக இருந்தது பாஜக  நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற ரீதியாக 80 தொகுதிகளில் இரண்டாம் இடமும். 36 சட்டமன்ற தொகுதிகளில் 25% மேல் ஓட்டு வாங்கி தனது முத்திரையை பதித்தது. 

இந்த நிலையில் ஓட்டுகள் பிரிந்து திமுக வென்று வந்தது மேலும் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியான, சிறுபான்மையினர் ஓட்டு வரும் என காத்திருக்காமல், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையின ஓட்டுகள் 20 சதவீதம் என எடுத்துக் கொண்டால், மீதம் இருக்கும் 80 சதவீத ஓட்டுகளில் 50 சதவீத ஓட்டுகளை பெற  திட்டமிட வேண்டும் என ஏற்கனவே டெல்லி மேலிடம் முடிவெடுத்துவிட்டார்களாம்.. இதற்கிடையே தீன் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன்  தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயாத்தை சார்ந்தவர்கள் 10 முதல் 12 சதவீதம் வரை உள்ளார்கள் வடதமிழகத்தில் வன்னியர் சமுதாயம் என்று பார்த்தால் 15 % இருக்கிறார்கள்.

இங்கு பாமக அதிமுக கட்சிகளின் வாக்குகள் கணிசமாக உள்ளது.  மேலும் தென் தமிழகத்தில் இதுவரை எந்த பெரிய கட்சிகளுக்கும் தலைவர்களை உருவாக்கவில்லை இதை மனதில் வைத்து  தான் முக்குலத்தோரை சேர்ந்த நயினார் நாகேந்திரன் அவர்களை பாரதிய ஜனதா கட்சி தனது மாநிலத் தலைவராக நியமித்து உள்ளது. இது தென் தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது, மேற்கு தமிழக பகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக வலுவாகவே உள்ளது. கவுண்டர் சமுதாயத்தில் இரு கட்சிகளிலும் அதிக தலைவர்களை கொண்டுள்ளார்கள். மேலும் தேசமும் தெய்வீகமும்இரு கண்கள் என்று ஐயா முத்து ராமலிங்க தேவர் வழியில் பயணிக்கும் தேவர் இன மக்கள் பிஜேபியை நோக்கி வந்தால் தமிழகத்தில் பாஜகவும்  மிகப்பெரி ய வளர்ச்சி கிடைக்கும். அதேபோல் திமுகவையும் வீட்டுக்கு அனுப்பலாம் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து பாஜக அமைச்சரவையில் இடம் பெரும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.