Politics

ஒன்றிணைந்த இந்துக்கள் நினைத்தது நடந்தது... திமுக அமைச்சர்கள் செய்த சம்பவம்...கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி..

a rasa
a rasa

திமுக எம்.பி.,யான ஆ.ராசா, ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டவர்.சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் மீடியாக்களில் பெயர் அடிபட வேண்டும் என்ற வியாதி இருக்கும். இந்த ‛‛கியூ''வில் முதலில் நிற்பவர் ஆ.ராசா.  


இதற்கிடையில் சென்னையில் உள்ள தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, ஏட்டில் அச்சேற்ற முடியாத அளவுக்கு, மிகவும் அசிங்கமாக அவர் பேசினார்.அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதும், பொன்முடிக்கு, அவர் சார்ந்த தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள், ஹிந்து சமய ஆர்வலர்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். ஆனால், தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து அவர் நீடிக்கிறார்.அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை, தி.மு.க., கண்டுகொள்ளாமல் இருப்பது,மகளிரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பொன்முடியை அடுத்து, கூட்டம் ஒன்றில் அமைச்சர் வேலு பேசிய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.அமைச்சர் வேலு, 'கோவிலுக்கு போய், ரவிக்கைக்கு பின்னால்' என, பெண்கள் மற்றும் கோவில்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். கோவிலுக்கு போகிறோம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழில் பாடுகிறோம். சிவன் கோவிலிலும், வைஷ்ணவ கோவிலிலும் போய், சோலி கே பீச்சே என பாட முடியுமா? நல்லா யோசனை பண்ணு. அப்புறம் எதற்கு ஹிந்தி படிக்கணும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசி உள்ளார். இப்படியே ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு கொடுத்த வேலையைப்பார்க்காமல் மத விஷயங்களில்  தலையிடுவது வழக்கமாகி விட்டது. 

இந்த புத்திசாலி அமைச்சர் இந்துக்களாக உள்ளவர்களின் நம்பிக்கைகளை கேவலப்படுத்த சற்றும் தயங்குவதில்லை. கடவுள் இல்லை எனும் கொள்கை உள்ள இந்த அமைச்சர்கள்  முஸ்லீம்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் கடவுள் நம்பிக்கைகளை பற்றி ஒரு வார்த்தை எதிராகப் பேச துணிவு உள்ளதா என பொதுமக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து ஓட்டிற்காக பெருபான்மையாக இருக்கும் இந்துமக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வருகிறார்கள் திமுகவினர். அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் உள்ளவர்களை சைவமா வைணவமா என கேட்க பொன்முடிக்கு தைரியம் உள்ளதா என திமுகவில் உள்ள பெண்கள் கேட்க துவங்கியுள்ளார். ஊடகங்கள் இது குறித்து பேசாமல் எப்போதும் போல் அதிமுக பாஜக என கத்தி வருகிறார்கள். 

தமிழகத்திலும் ஹிந்து வாக்குவங்கி மிக மிக மெதுவாக உருவாகி வருகிறது என்பது உண்மைதான்.. அதனால் திமுக தலைகள் பீதியில் உறைந்திருக்கிறார்கள்அதன் காரணமாக தான் பொன்முடியை கட்சி பதவியில் இருந்து தூக்கினார்கள். இல்லை என்றால் எப்போதும் போல் எந்தவித நடவடிக்கை எடுக்கலாம்  பேசாமல் இருந்திருப்பார்கள். இதே போல் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் அதிருப்தியில் உள்ளார்கள். 

இந்த நிலையில் திமுகவினர் இந்துக்கள் குறித்துபேசிய வீடியோக்களை சேகரித்து வருகிறார்கள் வெளி மாநிலங்ககளில் இருக்கும் இந்துக்கள் மேலும் இதுகுறித்து வழக்குகள் பதியவும் முடிவெடுத்து உள்ளார்கள். இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்க உள்ளார்கள் இந்து அமைப்புகள். உதயநிதி முதல் ஆ.ராசா வரை அனைவர் மீதும் உத்தரப்பிரேதசம் மகாராஷ்டிரா குஜராத் டெல்லி போன்ற மாநிலங்களில் வழக்கு பதிய தயாராகி உள்ளார்கள்.