
பாஜக அதிமுக கூட்டணி அமையுமா என தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடந்த நிலையில், அதை சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்தார். அப்போது அமித்ஷா திமுகவினர் ஊழல்வாதிகள் என்று விமர்சித்திருந்தார் மேலும்பாஜக கூட்டணி வைக்க விடாமல் இருக்க பல மீடியாக்கள் எப்போது பார்த்தாலும் அதிமுக பாஜக தலைவர்கள் பேசியதை மட்டுமே ஒளிபரப்பி வந்தார்கள். அண்ணா பல்கலை விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமூக ஆர்வலர்கள் தொடர் கொலை. டாஸ்மாக் ஊழல் அமைச்சர் பொன்முடி ஆபாச அமைச்சர் நேரு வீட்டில் ரெய்டு என திமுக அரசின் சாதனைகளை கூறாமல் அதிமுக குறித்தும் பாஜக குறித்தும் தான் செய்திகள் வெளியாகின குறிப்பாக அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி என ஈகோ பிரச்னைகளை தூண்டுவதில் குறியாக இருந்தார்கள். திமுக மீடியாக்கள்
இந்த நிலையில் தான் இதற்கான காரணம் வெளியாகி உள்ளது. திமுவிற்கு எதிராக கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக திமுக மண்ணை கவ்வும் என்பது தான். அதனால் தான் விஜயை களமிறக்கி திமுக அதிருப்தி ஓட்டுக்களை விஜய் பக்கம் திருப்ப திட்டமிட்டது. அனால் தற்போது அனைத்து திட்டங்களும் தவிடுபொடி ஆக்கியுள்ளது பாஜக கூட்டணி.இளைஞர்களின் ஓட்டுகள் அண்ணாமலை பக்கம் சொல்வதை தடுக்க விஜய் என்னும் யுத்தியை பயன்படுத்தினர் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது இது திமுக தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது . தற்போது திமுகவின் அமைச்சர்களின் செயல்பாடுகளும் ஊழல்களும் தலைவிரித்து ஆடுவதால் மக்களின் கோபம் அதிகமாகி உள்ளது நடிகர் விஜய்யும் திமுகவை மேம்போக்காகவே விமர்சித்து வருகிறார் தவிர களத்தில் இறங்கி இன்னும் வேலை செய்யவில்லை திமுகவை விமர்சிக்கவும் இல்லை.
அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலின் உதயநிதி என்ற பெயரை இதுவரை சொல்லியதில்லை எனவே விஜய் திமுகவின் பீ டீம் தான் என உறுதியாகி உள்ளது.இதற்கிடையே 2013 ஆம் ஆண்டு கருணாநிதி மற்றும் ஸ்டாலின் காங்கிரஸ் குறித்து பேசிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர்களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். என வீரமாக பேசினார்
அடுத்ததாக தற்போது முதல்வரும் அன்றைய திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சரியான தருணத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினோம். இனி காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்.யாருடன் கூட்டணி என்பதை விட யாருடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக உள்ளோம்:காங்கிரஸ் கட்சியுடன் இனி என்றுமே கூட்டணி கிடையாது. என்ற வீடியோக்க தற்ப்போது வைரலாகி வருகிறது.