24 special

தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவிலா???

shivan temple,Thiruvedkalam
shivan temple,Thiruvedkalam

பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அழகான சிவன் கோவில் ஆகும்!! தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் முதலானது சிதம்பரம். அதன் பிறகு இரண்டாவது இடத்தில் அமைந்து இருப்பது தான் இந்த திருவேட்களம்!! சாஸ்திரப்படி ஒரு கோவில் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படியே அமைக்கப்பட்ட கோவில்தான் இது!! பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்டது இக்கோவில். இக்கோவிலின் மூலவர் பாசிப்பரேஸ்வரர். தாயார் சத்குணாம்மாள் என்றும் நல்ல நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். 


 இந்தக் கோவிலானது ஆயிரம் முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்று தெரிய வருகிறது. 

பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற வேண்டுகிறான், அப்போது கிருஷ்ணன் நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசிக தந்தையான இந்திரன் இடமிருந்து பெற்றாய், ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவபெருமானிடம் இருந்துதான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்கிறார். இதைத்தொடர்ந்து அர்ஜுனனுக்கும் சிவனுக்கும் சொற்போரும், பிற்போரும் இங்கு பல மோதல்களும் ஏற்பட்டு உள்ளது என்று தல வரலாறு கூறுகிறது. அப்படி அந்த போரில் அர்ஜுனன் வாலால் அடித்த தழும்பு சிவன் மீது இன்றும் இருப்பதை காணலாம்.

இத்தலத்தில் உள்ள சிவனை தொழுதால் வினைகள் எல்லாம் தொலைந்து, இன்பம் தளைந்தோங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்தக் கோவிலில் உள்ள முருகப்பெருமான் 12 கைகளுடன், வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றார். இங்குள்ள முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிப்பதால் திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்று அங்கு உள்ளவர்கள் கூறுகின்றனர். 

மேலும் பேசுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றவர்கள் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு அங்கு தரப்படும் மண்ணுருண்டையினை சாப்பிட்டு சென்றால் விரைவில் அவர்களுக்கு உள்ள பிரச்சனை சரியாகும், மேலும் அவர்கள் விரைவில் பேசுவார்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் சிறுவயதில் இருந்து பேச முடியாமல் கஷ்டப்படும் நபர்களும், தங்களின் குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்று கவலைப்படும் பெற்றோர்களும் இங்கு வந்து கடவுளை வழிபட்டு தரப்படும் பிரசாதத்தினை சாப்பிட்டு செல்கின்றனர். உலகத்தில் வேறு எங்கும் இல்லாதது போல் சூரியனும் சந்திரனும் ஆகிய இரண்டும் அருகாமையில் அமைந்திருப்பது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது. 

அதோடு சூரிய, சந்திர கிரகணங்களில்  இங்கு அதிக அளவில் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றன. மற்ற நாட்களில் வழிபடுவதை விட இந்த சூரிய சந்திர கிரகணங்களின் போது வந்து வழிபட்டால் தங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும் கூறுகின்றனர். ஏதேனும் கிரகண பிரச்சனைகள் இருந்தால்  இந்தக் கோவிலில் வந்து வழிபட்டு செல்வதன் மூலம் பல மாற்றங்களை அவர்களாகவே உணர முடியும். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக இது உள்ளது. இந்தக் கோவில் காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரையிலும், அதன் பின் மாலை  5:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு வைகாசி விசாகம், ஆணி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் அதிக அளவில் மக்கள் கூடி இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு இந்த சிறப்பு நாட்களை மிகவும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர். இத்தகைய வரலாற்று பெருமைமிக்க பழமை வாய்ந்த சக்தி உடைய கோவிலுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள்!!