![UDHAYANITHI, A RASA](https://www.tnnews24air.com/storage/gallery/tCwd8XUUXqBcl6YER0pgJ2Kb7XWYi6LBWHZh6Ip9.jpg)
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி எதிரான கருத்துக்களை கூறி பல சர்ச்சைகளுக்கு உள்ளானார். அவர் அதைப் பற்றி பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதற்கு பலவிதமான கமெண்ட்டுகளும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டே இருந்தது. சனாதனம் என்பதே எதிர்ப்பதை விட ஒழிப்பதே செய்ய வேண்டிய முதல் காரியமாக உள்ளது என்று அவர் கூறினார். மேலும் இவர் கொசு கொரோனா டெங்கு போன்றவற்றை எதிர்ப்பதை விட ஒழிப்பது சிறந்தது, அதுபோலத்தான் இந்த சனாதனம் என்று கூறினார். இது இந்து அமைப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு ஒரு அமைச்சர் இது போன்று பேசுவது சரியா??? என்ற பல கேள்விகள் பொதுவாக முன்வைக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த நிகழ்வுக்குப் பிறகு சனாதனம் பற்றிய வீடியோக்கள், சனாதனக் கொள்கையில் வரும் ஒரு மதத்தினை போற்றுவது போல் பாடல்கள் பாடுவது, பூஜைகள் செய்வது மேலும் பூஜைகள் செய்வது போன்று பல செயல்கள் மக்களால் பதிவிடப்பட்டது.
மேலும் சின்ன குழந்தைகள் முதல் மிகவும் வயதானவர்கள் வரை அனைவரும் இதனை செய்ய ஆரம்பித்தார்கள். இதனை இந்திய நாட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ளவர்கள் கூட இது குறித்து பல செயல்கள் செய்து, பூஜைகளும் நடத்தினர். இவ்வாறு வெளிநாட்டில் வசிப்பவர்கள் கூட இந்தியாவை விட்டுப் போனாலும் இந்து மரபை பின்பற்றி அவர்களும் செய்ததோடு அவர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களின் மனதை பதிய வைக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது. மேலும் மந்திரம் படிப்பதற்காகவே தனிப்பட்ட ஒரு பள்ளிக்கு சென்று படிக்கும் சிறுவயதில் உள்ளவர்கள் கூட பழமை வாய்ந்த பெரிய புராணம் போன்ற பாடல்களை உற்று நோக்கி அவற்றிற்கு உரிய பாடலின் அர்த்தத்தையும் அந்த கதையினையும், மேலும் அதில் நடந்த உண்மை கதைளையும் கூறியிருக்கின்றனர். இது போன்று பல நிகழ்வுகள் உலகெங்கும் நடந்து கொண்டே தான் உள்ளது. இதனால் தற்போது சனாதனத்தை பற்றி பேசுவதற்கு திமுக மிகவும் அதிர்ந்த நிலையில் உள்ளது. மேலும் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் அவர்கள் தேசிய அளவில் வைத்திருந்த இண்டி கூட்டணியிலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
இதனை சமாதானப்படுத்துவதற்கு முடிவு பண்ணியே மழை வெள்ளத்தின் போது மக்களை கவனிக்காமல் முதல்வர் டெல்லிக்கு சென்று மாநாட்டில் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் பிறகு அந்த மாநாட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, சனாதனத்தை பற்றி எதுவும் பேசாமல் திமுக அமைதியாக உள்ளது. மேலும் திமுக எம்பி ஆன ராசா சனாதனம் பற்றி மனுதர்மத்தின் கொள்கையை எடுத்துரைத்து சூத்திரம் என்னும் இழுவை தமிழர்கள் சுமக்க கூடாது என்னும் கண்ணோட்டத்தில் அவர் பேசிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மாநிலங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் இவர் மீது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி ஒட்டுமொத்த திமுகவே இந்து சமயத்தை எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திமுக தலைவரான மு க ஸ்டாலின் தனது மகனிடம் இனி சனாதனத்தை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்கள் அனைத்தையும் எந்தத் தவறும் இல்லாமல் மிகவும் அருமையாக மிகச்சிறிய பையன் கூறி, பூஜையில் அழகாக அனைத்து செயல்களையும் செய்து கொண்டுள்ளான்!! அவன் ஏதாவது தடுமாற்றம் அடைந்தாலும் பக்கத்தில் இருப்பவர்கள் அதனை ஆரம்பித்து விட்டால் அவன் அதனை சரியாக முடித்து விடுகிறார் மேலும் போதும் என்று கூறினாலும் அந்த பூஜையை முழுமையாக செய்துவிட்டு வருவதை பார்க்கும் போது அவ்வளவு ஆச்சரியமாக உள்ளது!! இதனை பார்க்கும் போது சனாதன கொள்கை என்பது தற்போது பிறக்கும் குழந்தைகள் மத்தியில் கூட நல்ல வேரூன்ற ஆரம்பித்துள்ளது!!