![abroad,money](https://www.tnnews24air.com/storage/gallery/uF90U1gEWWgetG44N4ltv9RKym4jeijOFHMZRgSI.jpg)
இன்றைய சமூகத்தில் பணம் என்ற ஒன்று அனைவரின் தேவையாக உள்ளது. நமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை கூட வாங்குவதற்கு பணம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே வாங்க முடியும். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவில் இருந்து தண்ணீர் வரை அனைத்துமே தற்போது பணமாகிவிட்டது. இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குடும்பத்தில் ஒருவர் மட்டும் பணிக்கு செல்வது என்பது போதுமானதாக இருப்பது இல்லை. எனவே ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியாக இருவரும் சம்பாதித்தே ஆக வேண்டும் என்பது தற்போது அத்தியாவசியமாக ஆகிவிட்டது. இதிலும் சிலருக்கு வேலை தேடிய உடனே அவர்கள் எதிர்பார்க்கும் அதிகமான சம்பளத்தில் வேலை கிடைத்து விடுகிறது, ஆனால் சிலருக்கு அப்படி இல்லை. அவர்கள் என்னதான் பல இடங்களில் வேலை தேடினாலும், கடைசியில் சாதாரணமான ஒரு வேலையில் வேறு வழி இன்றி செல்வார்கள்.
அதில் கடினமாக உழைத்தாலும் அவர்களின் சம்பளம் 20 ஆயிரத்தை தாண்டுவது கிடையாது இப்படிப்பட்ட நிலைமையும் தற்போது சமூகத்தில் நிலவி வருகிறது. அதனாலயே இப்போது உள்ள இளைஞர்கள் தங்களின் குடும்பத்தின் நிலையை மாற்றுவதற்காகவும், தனது குடும்பத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்காகவும் எப்படியாவது கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என பல கனவுகளோடு பல பாரங்களை சுமந்து கொண்டு வேலை தேடி வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றனர்.
இன்னும் சிலர் இதுபோன்று எந்த சுமையும் இல்லாமல் இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வெளிநாடுகளுக்கு சென்று கைநிறைய சம்பளம் எதிர்பார்த்தும், ஒரு குறுகிய காலத்திற்கு அங்கு வேலை செய்து மீண்டும் நம் தாய் நாட்டிற்கு வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்றும் மனதோடு சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை!! அங்கு போனவர்களும் அது பற்றி எதுவும் தன் உறவினர்களிடம் கூறாமல் தன் குடும்பத்தின் நிலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை அனைத்தையும் தாங்கிக் கொண்டு கடினமாக உழைக்கின்றனர். மேலும் அங்கு இருப்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் கூட வீட்டார்களுக்கு தெரிவது கிடையாது..
மேலும் பலர் வெளிநாட்டிற்கு கூட்டி செல்வதாகவும், அங்கு சென்றால் நல்ல வேலை கிடைக்கும் என்றும் இங்கு பணம் வாங்கி ஏமாற்றுபவர்களும் அதிகம் உள்ளனர். மேலும் அங்கு இறந்து விடுபவர்களின் உடல்நிலை கூட சில சமயங்களில் மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர முடியாமல் போகிறது. இது குறித்து சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஒரு திரைப்படத்தில் கூட சம்பவங்களை பற்றி குறிப்பிட்டு இருப்பர். இந்த திரைப்படத்திலும் கடைசிவரை அவரின் உடல் தாயகத்திற்கு திரும்புவது இல்லை.. இதுபோல பல குடும்பங்களும் இப்பிரச்சனை சந்தித்துவருகின்றனர். அதுபோல இப்போது ஒன்று நடந்துள்ளது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தங்கி வேலை செய்த தனது கணவர் கார்த்திக் ரங்கநாதர் இரவு வேலை முடிந்து விட்டு கம்பெனி வாகனத்தை தவறியதால் டாக்ஸியில் சென்றவர் இன்னும் அவர் தங்கியிருந்த இடத்திற்கு 2 நாளாகியும் வரவில்லை என்று அங்கு உள்ளவர்கள் கூறினார்கள், அதோடு இதுபோன்று அப்பகுதியில் இருக்கும் பணியாளர்கள் டாக்ஸியில் சென்றால் டாக்ஸியில் செல்பவர்கள் கடத்தப்பட்டு பாலைவனத்திற்கு விடப்படுவதாகவும் சில நேரங்களில் மதமாற்று கட்டாயத்திற்கு அவர்கள் உள்ளாக்கப்படுகிறதாகவும் ரங்கநாதரின் உடன் வேலை பார்க்கும் அவரது நண்பர்கள் தெரிவித்ததாக ரங்க நாதனின் மனைவி பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இதுபோன்று பலர் கடத்தப்பட்டு பிறகு மூன்று நாட்கள் கழித்து தனது இருப்பிடத்தை அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் இது குறித்து அங்கிருக்கும் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அதிக பிரச்சனை வரும் என்பதாலும் இது குறித்த புகார்களை துபாயில் இருக்கும் பணியாளர்கள் முன் வைப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அவருடைய மனைவி பயந்து தற்போது மத்திய, மாநில அரசிடம் தனது கணவரை மீட்டு தருமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்!!