அமைச்சர் பொன்முடி ரெயிடு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன ஒருபுறம் சென்னையில் பொன்முடி மற்றும் அவரது மகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வழக்கு பதிவுசெய்த அமலாக்கத்துறை இன்று காலை மணி முதல் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளது.
இந்த ரெய்டுக்காக அமைச்சர் பொன்முடி வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படையுடன் சுற்றிவளைத்த நிலையில் அவரது இல்லம் தற்போது அமலாக்கத்துறையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குள் வெளியில் இருந்து யாரும் உள்ளே, செல்லமுடியாது,மேலும் உள்ளிருந்து யாரும் வெளியேற முடியாதபடி அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது.
இந்த ரெய்டில் அமைச்சர் பொன்முடி வீட்டில் உள்ள பீரோவை திறப்பதற்காக மாற்றுச்சாவி போட்டு திறக்கும் தொழிலாளர் வரவழைக்கப்பட்டார், அமைச்சர் பொன்முடி வீட்டில் சென்று பார்த்த அந்த தொழிலாளி அரண்டு போனார்! அங்கே இரண்டு பீரோக்கள் மட்டுமல்லாது ஒரு பெரிய சைஸ் லாக்கர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இரண்டு பீரோவை மட்டும் திறக்க முடிந்த அவரால் அந்த 2 ஆள் சைசுள்ள லாக்கரை திறக்க முடியவில்லை! வெளியில் வந்த அந்த தொழிலாளர் அந்த லாக்கரை திறக்க முடியாதது பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இப்படி 2 ஆள் அளவுள்ள லாக்கரில் என்ன ஆவணங்கள் இருக்கும்? என்ன கோப்புகள் இருக்கும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த லாக்கரை திறக்க முயற்சித்து வருகின்றனர். அப்படி ஆவணங்கள் பெரிதாக சிக்கும்பட்சத்தில் அமைச்சர் பொன்முடி தரப்பினர் இந்த வழக்கில் வசமாக சிக்குவார்கள் என தெரிகிறது.