24 special

எத்தனை நாள் ஏசி ரூம்ல வச்சுருப்பீங்க...! அண்ணாமலை கேட்ட ஒற்றை கேள்வி அலறியடித்து புழலுக்கு அனுப்பும் காவிரி மருத்துவமனை...!

Annamalai,senthil balaji
Annamalai,senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவு அமலாக்க துறையினர் கைது செய்ய முற்படும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு இருதயத்தில் நான்கு அடைப்புகள் இருப்பதாகவும் அதனால் அவர் அறுவை சிகிச்சை செல்ல வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டது. 


பின்னர் அவர் மனைவி வேண்டுகோளுக்கிணங்க அவர் மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அடைக்கப்பட்டார், தற்பொழுது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் நீதிமன்ற காவலில் இருந்து வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

தற்பொழுது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் அமலாக்கத்துறை காவலில் எடுக்கவிடக்கூடாது என செந்தில்பாலாஜி மனைவி தரப்பும் நீதிமன்றத்தில் போராடி வருகிறது, இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். 

காவேரி மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கிறது? இருதய அறுவைசிகிச்சைக்கு ஒரு வாரம் தேவைப்படாதே? ஏன் இத்தனை நாள் செந்தில்பாலாஜி சிகிச்சையில் இருந்து வருகிறார்? என அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இது செந்தில்பாலாஜி தரப்பிற்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் உடல் நலம் தேறியதாக செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் படி தற்பொழுது அவர் காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் இப்படி காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டால் தற்பொழுது நீதிமன்ற காவலில் அவர் இருக்கும் காரணத்தினால் வீட்டிற்கோ அல்லது வேறு எங்கோ செல்ல முடியாது! 

அவர் சிறைக்கு தான் செல்ல வேண்டும் அதன் காரணமாக தற்பொழுது புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கைதி எண் 1440 ஏற்கனவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்படி ஒருபுறம் அமைச்சர் பொன்முடி சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதும், மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை செல்லவிருப்பதும் திமுக தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் தற்பொழுது புழல் சிறை செல்லும் காரணத்தினால் நீதிமன்ற காவல் முடியும் வரை அவர் புழல் சிறையில் தான் இருப்பார்! நீதிமன்ற காவல் முடிந்த பிறகு நீதிமன்றத்தின் அறிவுரைப்படி அவர் அமலாக்கத்துறை வசம் செல்ல இருப்பதாக தெரிகிறது. அப்படி அமலாக்கத்துறை அவரை தனது கட்டுப்பாட்டில் எடுத்தால் அவரை வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இன்று இரவோ அல்லது நாளை காலையோ செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த வாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார், அந்த கேள்வியில் ஏன் இன்னும் காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படும் மெடிக்கல் புல்லட் இன் மருத்துவ அறிக்கை கொடுக்கப்படவில்லை என! இப்படி அண்ணாமலை மெடிக்கல் புல்லட் இன் மருத்துவ அறிக்கை கேட்ட இரண்டு நாளில் காவேரி மருத்துவமனை அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறிப்பிடத்தக்கது.அனாலும் அண்ணாமலை கேட்ட மெடிக்கல் புல்லட் இன் அறிக்கை இன்னும் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.