தேவையில்லாமல் அரசியல் பேசி வசமாக வேறு விவகாரத்தில் சிக்கிக்கொண்ட கொண்ட நடிகை ரோஜா....!சமீபகாலமாக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா அரசியல் தலைவர்களை குறி வைத்து பேசி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேசி அவர் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். தமிழ்நாட்டில் ரஜினியை பற்றி பேசியத்திற்கு நடிகை ரோஜாவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.
அடுத்தபடியாக சன்னி லியோனை பற்றி பேசி அவரை வம்பு இழுத்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.ஆந்திரா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்ரா நடைபயணத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக தாக்கி பவர் கல்யாண் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோஜா பேசியது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பொதுக் கூட்டத்தில் பேசும்போது பவன் கல்யாணணை குறி வைத்து பேசி உள்ள நிலையில் பவன் கல்யாண் தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோஜா பொதுக்கூட்டத்தில் பேசும்போது பவன் கல்யாண் ஒரு பிரபல நடிகர் என்பதால் தான் மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்துள்ளதாகவும் இதை வைத்து அரசியலில் எந்த ஓட்டையும் பெற முடியாது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் பவன் கல்யாண் மக்கள் கூட்டத்தை கணக்கில் கொண்டு தனக்கு சாதகமாக ஓட்டுகளாய் வந்து குவியும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற சர்ச்சைக்குரிய பேச்சையும் வெளியிட்டுள்ளார். மேலும் பவன் கல்யாண் முதலமைச்சருக்கு எதிராக பேசுவதையும் சன்னி லியோன் ஒழுக்கத்தையும் ஒப்பிட்டு மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகை ரோஜாவின் பேச்சுக்கு எதிராக சன்னிலியோன் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சன்னி லியோன் தனது ட்விட்டர் பதிவில் “நான் ஒரு ஆபாச நடிகை தான் ஆனால் உங்களைப் போல் அல்ல என்றும் நான் எனக்குப் பிடித்ததை வெளிப்படையாக செய்கிறேன் ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை” என்றும் ஆபாசப்படங்களை விட்டு சன்னி லியோன் வெளியேறியதாகவும் ஆனால் ரோஜா இன்னும் அதில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சியான பதிவை வெளியிட்டது எம்எல்ஏவான ரோஜாவிற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
சன்னி லியோன் கடந்த காலத்தில் ஆபாச பட நடிகையாக இருந்திருக்கலாம் ஆனால் அதனை இப்படி குறிப்பிட்டு பேசுவது தவறான விஷயம் அதுவும் ஒரு நடிகையாக இருந்துகொண்டு ரோஜா இனொரு நடிகையான சன்னி லியோனை இப்படி பேசியது கண்ணாடி வீட்டின்மேல் கல் எரிந்தது போல் இருக்கின்றது பலரும் ரோஜாவின் விமர்சனத்தை கண்டித்து வருகின்றன.
அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் எதையாவது பேசிவிட்டு பிறகு விமர்சனங்களை எதிர்கொள்கிறார் நடிகர் நடிகை ரோஜா இதில் இவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நின்று அமைச்சராகும் எண்ணம் வேறு என ஆந்திரா அரசியலில் வெளிப்படையாகவே கிண்டல் செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லால் ரோஜா இப்படி சன்னிலியோன் விவகாரத்தில் பேசி சிக்கியதால் ஆந்திர யூட்யூப் சேனல்களில் நடிகை ரோஜாவை பற்றி பல கிசுகிசு விடியோக்கள் உலா வ்ருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகை ரோஜா வெற்றிபெற்ற தொகுதியான நகரி பகுதியில் ரோஜாவை பற்றி எதிர்க்கட்சிகள் பேச இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது என ஆந்திர அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.