அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் தற்பொழுது நடந்து வரும் ரெய்டு தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் கட்சி அமைச்சர் வீட்டில் நடந்து வரும் ரெய்டாகும், குறிப்பாக அவரது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களை சார்ந்த 200 இடங்களில் நடந்து ரெய்டில் பல்வேறு ஆவணங்கள், லேப்டாப்புகளில் தகவல்கள், பென்டிரைவுகள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சிக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று முன்தினம் முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை யை தொடங்கினர். தமிழகத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரெய்டு நடக்கவிடாமல் செந்தில்பாலாஜியின் அதிகாரிகளை தாக்கியதும் பின்னர் டெல்லி தலையிட்டு விவகாரத்தை கையில் எடுத்ததும் செந்தில்பாலாஜிக்கு தற்பொழுது வாழ்நாள் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் கணக்கில் வராமல் இருந்த பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது முதற்கட்டமாக ரூ.3.50 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டில் இருந்த பணத்துக்கு உரிய கணக்கு விபரங்களை காட்டாத நிலையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் 2000 ரூபாய் கட்டுக்களாக கிடைத்தது அதிகரிகளுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த வருமான வரி சோதனை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனால் சோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகு அதுபற்றிய விபரங்களை அதிகாரிகள் வழங்குவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
வீடு முதல் நாளில் மூன்றரை கோடி ரூபாய் சிக்கியது எனவும் அடுத்தடுத்த அவரின் ஆதரவாளர்கள் வீட்டில் பணம் சிக்குவதும் அவை அனைத்தும் 2000 ரூபாயாக இருப்பதும் தகவல் தெரியவந்துள்ளது. இப்படி 2000 ரூபாயாக தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இடத்தில் செய்யப்படும் ரெய்டில் சிக்குவதால் மூன்று தினங்களில் முடிக்க வேண்டிய ரெய்டு இன்னும் சில தினங்களுக்கு நீட்டிக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் தாக்கப்பட்ட பெண் அதிகாரி காயத்ரி தற்பொழுது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து மீண்டும் அவர் பணிக்கு திரும்பி உள்ளார் எனவும் அவர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மறுபடியும் ரெய்டு பணியில் இறங்குவார் எனும் தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படி 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெரும் சமயத்தில் மக்கள் அனைவரும் எங்களிடம் 2000 ரூபாய் இல்லை நாங்கள் எங்கே போய் மாற்றுவது என கேட்டு வரும் வேளையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கியவர்கள் வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அள்ள அள்ள வருவது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே சிபிஐ வேறு செந்தில்பாலாஜி விவகாரத்தில் நுழைய சமயம் பார்த்து காத்திருக்கும் வேளையில் இப்படி 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் சிக்குவது அதுவும் ரிசர்வ் வங்கி நோட்டுக்களை திரும்பப்பெறும் வேளையில் சிக்குவது செலாவணி வழக்குகளுக்கு வழிவகுக்கும் எனவும் அப்படி செலாவணி வழக்குகள் தொடுக்கப்பட்டால் இனி செந்தில்பாலாஜி தேர்தலிலே போட்டியிட முடியாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.