2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதில் போக்குவரத்து துறையில் புதிய பணி நியமனம் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள வழக்கு இவர் மீது சுமத்தப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது, இதனை அடுத்து டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்திலும் முறைகேடு செய்துள்ளதாக இவர் மீது மற்றொரு புகாரும் கூறப்பட்டது. இதற்கு அடுத்ததாக திமுக கட்சிக்கு மாற்றய செந்தில் பாலாஜி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவியிலும் டாஸ்மாக்கில் 30 ரூபாய் வரை பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக வைத்து விற்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுந்தது.
இப்படி தொடர் குற்றச்சாட்டுகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்து கொண்டிருந்த நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் என்பவரின் வீட்டில் சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி தங்களது பணிகளை செய்ய முடியாமல் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிகாரிகள் வந்து வாகனங்களை தாக்கியதோடு அதிகாரிகளின் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சில அதிகாரிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பி அசோக்கிற்கும் ரத்த பந்தம் தாண்டி அரசியலில் மிக நெருக்கமான உறவு இருப்பதாகவும் கூறப்படுகிறது, இதற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி பண பட்டுவாடா விஷயத்தில் சிக்கிய போது அதில் முழுமையாக தலையிட்டு இருந்தது அவரது சகோதரர் அசோக் என்றும் பல தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காவல் நிலையத்திடம் அதிகாரிகள் புகார் ஒன்றை வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்ததன் பெயரில் மத்திய அரசு இதில் தலையிட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சி ஐ எஸ் எப் வீரர்களை அனுப்பியது. இரண்டு நாட்களாக இப்படி சோதனைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக வருமானவரித்துறை அதிகாரிகள் சார்பாக வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்த வழக்கில் வருமானவரித்துறை ரெய்டு நடத்த சென்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிகாரிகளை தாக்கியது எதார்த்தமாக நடந்த செயலல்ல திட்டம் போட்டு நடந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் ஆடியோ பதிவு ஒன்றையும் சமர்ப்பிக்க உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் சாதாரணமாக நடந்து முடிய வேண்டிய வருமானவரித்துறை ரெய்டு சிபிஐ அளவிற்கு தற்போது சென்றுள்ளது.
தற்போது நான்காவது நாளாக தொடரும் இந்த வருமானவரித்துறை ரெய்டில் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட பங்களாவை வருமானவரித் துறையினர் ஸ்கெட்ச் போட்டு ரவுண்டு கட்டி உள்ளனர். மேலும் இந்த பிரம்மாண்ட பங்களாவிற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கோடிக்கணக்கில் பொருட்கள் வாங்கியதும், கரூர் மற்றும் கொங்கு மண்டலத்தில் இந்த அளவிற்கு பிரம்மாண்ட மாளிகையை யாருமே இதுவரை கட்டியதில்லை எனவும், கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் அளவிற்கு இந்த பங்களாவை கட்டி வரும் செந்தில் பாலாஜியை அனைவரும் வாய்பிளக்க பார்த்தனர்.
இந்த தகவலை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார், மேலும் அந்த அரைமனையின் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.அந்த பங்களாவில் வருமானவரித்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.